நெல்லை: பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை; மேலப்பாளையத்தில் போலீஸ் குவிப்பு
தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
![நெல்லை: பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை; மேலப்பாளையத்தில் போலீஸ் குவிப்பு Nellai: Central government bans Popular Front of India organization Police force in melapalayam நெல்லை: பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை; மேலப்பாளையத்தில் போலீஸ் குவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/28/e4f5e9401577720ae98d12da02ff43ee1664361599676109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி பலரை கைது செய்தனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி அளித்ததால் இந்த சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அந்த வகையில் நெல்லை மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மேலப்பாளையத்தில் ஆங்காங்கே மாநகர காவல் துணை ஆணையர்( கிழக்கு) சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாதுகாப்பு கவச உடைய அணிந்த அதிரடி போலீசார் கையில் லத்தியும் கையுமாக குவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. அதேபோல் வஜ்ரா வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் நெல்லையில் பத்தமடை, ஏர்வாடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே என்ஐஏ சோதனையை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதால் முன்னெச்சரிக்கையாக போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)