மேலும் அறிய

Kanniyakumari : "கோடீஸ்வரன் ஆகியும் நிம்மதி இல்லை" லாட்டரியில் 25 கோடி வென்றவர் புலம்பல்..! நடந்தது என்ன..?

கேரளாவில் லாட்டரியில் ரூபாய் 25 கோடி வென்ற நபர் நிம்மதியாக வெளியில் நடமாட முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 18-ம் தேதி நடந்தது. அதில் முதல் பரிசான 25 கோடி ரூபாய் திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு கிடைத்தது. குலுக்கலுக்கு முந்தைய நாள் மாலையில் பழவங்காடி பகவதி லாட்டரி ஏஜென்சியில் இருந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு மறு நாளே 25 கோடி ரூபாய் கிடைத்தது அனூபை ஆனந்த கடலில் ஆழ்த்தியது.
 
தனக்கு 25 கோடிரூபாய் பரிசு கிடைத்ததை தனது மனைவி மாயாவிடம் முதலில் சொல்லியதாகவும், தனது மகன் சேமித்து வைத்த உண்டியலை உடைத்து அந்த பணத்தில் 500 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கியதாகவும் அனூப் தெரிவித்தார். ஆட்டோ ஓட்டி வந்த அனூப் வெளி நாட்டுக்குச் செல்வதற்காக கேரளா கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தார். இந்த நிலையில் 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என வங்கியில் கூறிவிட்டார். வெளி நாட்டுக்கு வேலைக்குச் செல்லும் திட்டத்துக்கும் முழுக்குபோட்டுவிட்டார்.
 
Kanniyakumari :
 
 25 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ள அனூபுக்கு 10 சதவீதம் ஏஜெண்ட் கமிஷன் மற்றும் 30 சதவீதம் வரி போக 15.75 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த பணத்தில் தொழில் செய்யபோவதாக அனூப் கூறியிருந்தார். கடந்த ஆண்டு வரை ஓணம் பம்பர் பரிசுத்தொகை 12 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டுதான் 25 கோடி ரூபாயாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. கேரள லாட்டரி வரலாற்றிலேயே அதிக தொகை பரிசாக பெற்றவர் என்றநிலையில் அனூபை மீடியாக்கள் தொடர்ச்சியாக நேர்காணல் செய்தன. இந்த நிலையில் தன்னிடம் கடன் கேட்டு தினமும் வீட்டுக்கு நிறையபேர் வருவதால் தனக்கு நிம்மதி இல்லை என்றும், தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார் அனூப்.
 
அனுப் வீடியோவில் கூறுகையில், "ஓணம் பம்பர் பரிசு கிடைத்தபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஆள்கூட்டமும், டி.வி கேமராக்களையும் கண்டபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது எனது சந்தோசம் எல்லாம் போய்விட்டது. எனக்கு வெளியில் இறங்க முடியவில்லை. எந்த இடத்துக்கும் போக முடியாத நிலை ஏற்படுள்ளது. உதவிகேட்டு தினமும் நிறையபேர் வருகிறார்கள். அதனால் எனது சகோதரியின் வீட்டில் இப்போது உள்ளேன். எனது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் இப்போது இங்கு வந்தேன். நான் வீடு மாறினாலும் அதை கண்டுபிடித்து அங்கு வந்துவிடுகிறார்கள். சொந்த வீட்டுக்கே வரமுடியவில்லை. கோடீஸ்வரனாக இருந்தாலும் சொந்த குழந்தையிடம் வரமுடியாத நிலையிலேயே உள்ளேன். இதை பார்க்கும்போது இவ்வளவு பணம் கிடைத்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன். மூன்றாம் பரிசு கிடைத்திருந்தால்கூட போதும் என்ற எண்ணம்தான் வருகிறது. ஏற்கனவே எதிரிகள் அதிகம், இப்போது இன்னும் அதிகரித்துவிட்டார்கள்.
 
Kanniyakumari :
 
எனது கையில் இன்னும் பணம் வந்துசேரவில்லை எனச்சொன்னாலும் நம்பாமல், 'கொஞ்சமாவது பணம் எடுத்து தா' என கேட்கிறார்கள். தொலைகாட்சிகளில் என்னை பார்த்தால் எங்கு போனாலும் அடையாளம் காண்டு பணம் கேட்கிறார்கள். மாஸ்க் வைத்துவிட்டுகூட வெளியில் போக முடியவில்லை. என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூட முடியவில்லை. நான் இப்போது வீடியோ பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டின் கேட்டை தட்டிக்கொண்டு ஆட்கள் நிற்கிறார்கள். பணம் இன்னும் கிடைக்கவில்லை எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் இருக்கிறார்கள். பணம் கிடைத்தாலும் அதை வைத்து உடனடியாக நான் எதுவும் செய்யப்போவதில்லை. வரி குறித்து நிறைய விஷயங்கள் தெரிய வேண்டியது இருக்கிறது. எனவே இரண்டு வருடத்துக்கு பிறகே அந்த பணத்தை எடுத்து எதாவது செய்ய திட்டமிட்டுள்ளேன். உதவி செய்யும் எண்ணம் எனக்கும் உள்ளது. எனது நிலையை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்" என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Embed widget