மேலும் அறிய

Lok Sabha Election 2024: தென்னிந்தியாவில் ஒரு தொகுதி கூட பாஜக வெற்றிபெறாது - காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு

மு க ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார்கள். தமிழ்நாட்டில் பிஜேபி வருவதற்கு வாய்ப்பே கிடையாது. பகல் கனவு காண வேண்டாம்.

நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு  பின்னர் அவர் செய்தியாளர்கள் கூறுகையில்,  ”நாடு முழுவதும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தை பொறுத்த அளவில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.  மக்களால் பெரிதும் போற்றப்படும் கூட்டணியாக மாறி உள்ளது. இந்தக் கூட்டணி இந்திய அளவில் 400 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்படும்.  சீட்டு ஒதுக்குவதில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு கருத்து வேறுபாடு இருந்தது. அன்றைய தினமே அது பேசி சரி செய்யப்பட்டுள்ளது.  அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் கூட்டணியாக உள்ளது. 

ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் இரு வேறு நபர்கள் அல்ல இருவரும் ஒருவரே. தமிழ்நாட்டில் வெற்றி பெற திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி பிரச்சாரமும் தமிழக அரசு செய்த சாதனைகளுமே போதுமானது.  இருந்த போதிலும் தமிழக முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே பிரச்சார மேடையில் பங்கேற்பார்கள். மோடியை ஒப்பிடுகையில் ராகுல் காந்திக்கு தமிழகத்தில் 79% மக்கள் ஆதரவு உள்ளது. மோடிக்கு 26% மக்கள் ஆதரவு. 10 வருடம் பிரதமராக இருந்தவருக்கு இது தான் தமிழ்நாட்டின் நிலை. தென்னிந்தியாவில் ஒரு தொகுதி கூட பாஜக வெற்றி பெறாது.  வட இந்தியாவில் கடந்த முறை பெற்ற வெற்றியில் நான்கில் ஒரு பங்கு வெற்றியை கூட பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.  இந்தியா கூட்டணி தலைவர்கள் வலுவான தலைவர்கள். மோடிக்கு பயத்தின் காரணமாக எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களை அமைச்சர்களை கைது செய்து வருகிறார்கள்.

ஓராயிரம் மோடி வந்தாலும் இந்தியாவில் மீண்டும் பிஜேபி ஆட்சியை பிடிக்க முடியாது. இந்தியா கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும். இந்த கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காக்கும் கூட்டணி. இந்த கூட்டணி மக்களுக்கான கூட்டணி.  மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறை, நாட்டில் எதெல்லாம் நடக்க கூடாதோ அதெல்லாம் நடைபெறுகிறது. இந்தியாவின் இந்தியா மக்களின் காக்க ஒரு சபதம் எடுத்து செயல்படுகிறோம்.

கருத்துக் கணிப்புகள் எல்லாம் அனைத்தையும் தவிடு பொடி ஆக்குவோம். நெல்லை தொகுதியில் உறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் நூற்றுக்கு இருநூறு சதவீதம் வெற்றியை பெறுவார். கடந்த முறை பெற்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் பெறுவோம். மு க ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார்கள்.

தமிழ்நாட்டில் பிஜேபி வருவதற்கு வாய்ப்பே கிடையாது. பகல் கனவு காண வேண்டாம்.  மோடிக்கு எதிராக பேசும் ஒரே முதல்வர் நம்முடைய முதல்வர். முக ஸ்டாலின் மட்டுமே தைரியமாகவும், ஆணித்தரமாகவும் மக்கள் மன்றத்தில் பேசும் ஒரே முதல்வர். தமிழகத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது மோடி வரவில்லை. தமிழகத்தில் திட்டங்களை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மோடி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஒன்று செய்யவில்லை நான்கு பணக்காரர்களை மட்டும் வளர்த்து விட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget