கூடங்குளத்தில் பரபரப்பு...மணல் கொள்ளையை தடுக்க முயன்ற எஸ்ஐக்கு அரிவாள் வெட்டு..!
இதுகுறித்து இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் உதவி ஆய்வாளர் பார்த்திபனை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன். இவர் போலீசாருடன் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது விஸ்வநாதபுரம் கூடங்குளம் ரோட்டில் வேகமாக சென்ற டெம்போ ஒன்றை வழி மறித்துள்ளார். அப்போது அது நிற்காமல் சென்றுள்ளது. உடனே உதவி ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அதில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் உதவி ஆய்வாளர் பார்த்திபனை அரிவாளால் தாக்கியுள்ளனர்.
இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்கள் இருவரும் மடக்கி பிடித்து டெம்போவை பறிமுதல் செய்து கூடங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உதவி ஆய்வாளர் பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் (307) கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஆவரைகுளத்தை சேர்ந்த அண்ணன் தம்பியான சங்கர், மணிகண்டன் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்