Crime : காதல் திருமணம் செய்த இளம் பெண் கடத்தல்... கணவர் புகார்... 10 பேர் மீது வழக்குப்பதிவு
தென்காசி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்திவிட்டதாக அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்திவிட்டதாக அவரது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சங்கர் முருகன். இவர் திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அங்கு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பணிபுரிந்து வந்தார், ஒரே இடத்தில் பணிபுரிந்த இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் கடந்த 28.8.2022 அன்று திருப்பூர் பகுதியில் இருந்து சங்கரன்கோவில் வந்து அங்கு ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காதல் மனைவி காணாமல் போயுள்ளார். இதனால் தனது மனைவியை காணவில்லை என்றும், யாரோ கடத்திச் சென்று விட்டனர் எனவும் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் சங்கர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். மேலும் காதல் மனைவியின் உறவினர்களான தாத்தா பவுன்பாண்டியன், சித்தப்பா அணில், தாயார் ராஜம்மாள், சித்தி அனிதா உட்பட 10 பேர் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன இளம்பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்