மேலும் அறிய

காதலுக்கு எதிர்ப்பு....ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடிகள் - குமரியில் சோகம்

உமா கவுரியும் மருங்கூர் இசக்கி யம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேணுமோகன் (20) என்பவரும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மருங்கூர் இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்லம்பிள்ளை. இவரது மனைவி அமுதா (வயது 48). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் உமாகவுரி (20). செல்லம்பிள்ளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அமுதா தனது 2 மகள்களுடன் நாகர்கோவில் சிதம்பரம் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அமுதா நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிலும், மகள்கள் இருவரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தனர். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற உமாகவுரி தனது சகோதரியிடம் முன் கூட்டியே வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு உமா கவுரியின் சகோதரி வீட்டிற்கு வந்தபோது உமா கவுரியும் மருங்கூர் இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேணுமோகன் (20) என்பவரும் ஒரே சேலை யில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.

காதலுக்கு எதிர்ப்பு....ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடிகள் - குமரியில் சோகம்
 
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தாயாருக்கும் கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். டி.எஸ்.பி. நவீன்குமார் இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உமா கவுரி, வேணுமோகன் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் உமாகவுரி குடும்பத்தோடு நாகர்கோவிலுக்கு வந்துள் ளார். நாகர்கோவிலுக்கு வந்த பிறகும் வேணுமோகன் உமாகவுரியுடன் செல்போனில் அடிக்கடி பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வேணுமோகன் தனது காதலி உமாகவுரியிடம் நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இதையடுத்து வேணு மோகன் நாகர்கோவிலில் உள்ள உமாகவுரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வேணுமோகனின் நண்பர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தற்கொலை செய்து கொண்ட வேணுமோகன், உமாகவுரியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வேணுமோகன் உமாகவுரியின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். தற்கொலை செய்து கொண்ட வேணு மோகன், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Embed widget