கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஏசுதாஸ் சுசீந்திரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஏசுதாஸ் சுசீந்திரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. உடலை மீட்ட சுசீந்திரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையால் காவலர் ஏசுதாஸ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - கடலூரில் 100...200...300...என உயரும் கொரோனா - நேற்று ஒரே நாளில் 308 பேருக்கு தொற்று உறுதி
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - சேலம் மாவட்டத்தில் சண்டை சேவல்கள் வளர்ப்போர் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு - சேவல் சண்டை நடத்த அனுமதி தர கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் ஏசு தாஸ் (52), நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுசீந்திரம் அக்கரை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாதக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - ஃபாரீனுக்கு பறக்கும் பனை ஓலை பெட்டிகள்...! - பனையை பணமாக்கும் ராமநாதபுரம் பெண்கள்
சம்பவ இடம் சென்ற சுசீந்திரம் போலீசார் காவலர் ஏசு தாஸின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் ஏசுதாஸ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது, காவலர் ஏசுதாஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - Pongal gift| தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு வெல்லத்தில் ஊசி சிரஞ்ச் இருந்ததாக புகார்