மேலும் அறிய

குளிர்பானத்தில் விஷம்...தெரியாமல் குடித்த சிறுவன் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே 6ம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர் குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவனின் சிறுநீரகங்கள் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பலி.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே 6ஆம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர் குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் மாணவனின் சிறுநீரகங்கள் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார். இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியையடுத்த நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வெளிநாட்டில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வினுக்கு 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது அதை தொடர்ந்து அவரது தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கபட்டிருத்த நிலையில் மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் அஸ்வின் ஆசிட் திரவம் உட்கொண்டதாகவும் அதனால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

குளிர்பானத்தில் விஷம்...தெரியாமல் குடித்த சிறுவன் உயிரிழப்பு.. போலீஸ் விசாரணை
 
இதுகுறித்து மாணவனின் தாயார் அஸ்வினிடம் கேட்டபோது, பள்ளியில் தேர்வு நடைபெறும் போது தேர்வு எழுதிவிட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் அப்பள்ளியை சேர்ந்த அடையாளம் தெரியாத ஒரு மாணவன் குளிர்பானம் கொடுத்தாகவும் அந்த குளிர்பானத்தை குடித்ததாகவும் அது முதல் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் தான் பயத்தால் வீட்டில் சொல்லவில்லை எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பள்ளியில் படிப்பில் ஏற்பட்ட போட்டியா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த மாணவனை தேடி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget