![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இராமநாதபுரம் வரும் போது மிகப்பெரிய வலுவான போரட்டத்தை நடத்துவோம்.
![அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள் human chain protest on the beach protesting against the non-construction of the bait arch bridge in the Amalinagar sea area TNN அமலிநகர் கடல் பகுதியில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் - என்னாச்சி என கேட்கும் மீனவர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/83e958bcc2ee97147f58a205ab788d961691638085117739_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் கடல் பகுதியில் அரசு அறிவித்தபடி தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படாததை கண்டித்து மீனவர்கள் கடற்கரையில் மனிதங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுவதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று வரும் போது கரையில் படகுகளை நிறுத்த சிரமம் ஏற்படுவதாகவும், இதனால் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இதனால் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் 2022ம் ஆண்டு சட்டப்சபை மீன்வள மானிய கோரிக்கையின் போது, ரூ.58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டு கடந்து விட்ட நிலையில் அதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமலிநகர் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 200 படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.மீனவர்களின் போராட்டத்தால் நாளொன்றுக்கு சுமார் ரூ.1.50 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கடற்கரையில் மனித சங்கிலி அமைத்து தமிழக அரசை கண்டித்தும் மீன்வளத்துறையை கண்டித்தும் கண்டன கோசங்களை எழூப்பினர். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பை புறக்கணித்து தொடர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை என அதிருப்தி தெரிவிக்கும் மீனவர்கள் இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காலம் தாழ்த்தினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இராமநாதபுரம் வரும் போது மிகப்பெரிய வலுவான போரட்டத்தை நடத்துவோம் என தெரித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)