தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அல்வா கொடுக்கும் நூதன போராட்டம்
” தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றுவதை உணர்த்தும் வகையில் இந்து தேசிய கட்சியினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்”
திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது, குறிப்பாக அதில் நகை கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயர்த்தப்படும், புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும், மாதம் ஒரு முறை மின்கட்டணம் எடுக்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதம் 1000 வழங்கப்படும் என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது, ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக கூறி இந்து தேசிய கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்,
இந்தநிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றும் திமுக அரசை கண்டிக்கும் வகையில் இந்த தேசிய கட்சியினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், குறிப்பாக பொங்கல் பரிசுத்தொகை 2500 or 5000 வழங்கப்படாமல் பொதுமக்களுக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பொதுமக்களின் வாக்குகளை அறுவடை செய்து அதிகாரம் படைத்த அரியணையில் அமர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாக கூறி இந்து தேசிய கட்சியின் நிறுவனர் எஸ்.எஸ்.எஸ்.மணி தலைமையில் நிர்வாகிகள் கையில் அல்வா உடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர், பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு அல்வாவை வழங்கி திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக கோஷம் எழுப்பினர்,
வாக்குறுதிகள் என்ற பெயரில் ஆசைவார்த்தை கூறி அவற்றை உடனடியாக நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர். நெல்லையில் திமுக அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை எடுத்துக்கூறும் வகையில் நூதனமாக பொது மக்களுக்கு அல்வா வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போராட்டம் குறித்து இந்து தேசிய கட்சியின் நிறுவனர் எஸ்.எஸ்.எஸ்.மணி கூறும் பொழுது, கடந்த கால எதிர்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின் போராளி போன்று செயல்வடிவம் கொடுத்து கொண்டு இருந்தார், நிகழ் கால முதல்வரான பின்பு தவறான செயல் வடிவம் கொடுத்து வருகிறார், வாக்குறுதிகளில் கொடுத்ததை நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார், ஏமாற்றத்தின் பொருளாக அல்வா என்று அகராதியில் அமைந்து விட்டது, அதனை பொதுமக்களுக்கு தொடர்ந்து ஆட்சியாளர்கள் அல்வா கொடுத்து வருகின்றனர், அதனாலேயே ஆட்சியர் அலுவலகம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்,
Watch video | நாங்க கை வச்சா... மண்ணெல்லாம் பொன்னு தான்.. விவசாயத்தை அடையாளமாக்கிய கிராம பெண்கள்!