இழிந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் திராவிடர்கள்.. வள்ளுவர் மீது கோபம் வருகிறது - எச். ராஜா பேச்சு
”பிறன்மனை நோக்கா பேராண்மை என்ற வள்ளுவரை பேசியது தான் திராவிட ஸ்டாக்கிற்கு ஆட்சேபனை’ கண்ணதாசன் எழுதிய வனவாசத்தை படியுங்கள், எவ்வளவு ஒழுக்கக்கேடர்கள் திராவிட இயக்க தலைவர்கள் என சொல்லியிருக்கிறார்.
இந்துக்களின் பண்டிகைகளை இந்துக்களால் கொண்டாட முடியவில்லை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீர விநாயகர் சதுர்த்தி விழா குழு மற்றும் அனைத்து இந்து சமுதாயம் சார்பில் விநாயகர் ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, கும்பகோணத்தில் கூடுதல் சிலை வைத்ததாக காவல்துறையினரே அதனை கொண்டு சென்று கரைத்துள்ளனர். இது எவ்வளவு பெரிய தவறு. அப்படியென்றால் காவல்துறை சீருடை கழட்டி விட்டு, காவி கட்டி மத சின்னங்கள் அணிந்து எடுக்கிறீர்களா? என்ன ஒரு அராஜகம் தமிழ்நாட்டில். இந்து விரோத தீய சக்திகளின் ஆட்சிகளில் இந்துக்களின் பண்டிகைகளை இந்துக்களால் கொண்டாட முடியவில்லை. தமிழகத்தில் காவல்துறை இது போன்று நடந்துக் கொள்ளக்கூடாது. காவல்துறையில் இருக்கும் கருப்பு ஆடுகள் இது போன்று செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனை அவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இது தான் திராவிட ஸ்டாக்கிற்கு உதைக்கிறது:
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் இந்து மதத்திற்கு நேரடியாக இருக்கிற தடங்கல்கள், பிரச்சினை இப்போது கருத்தியல் ரீதியாக இந்து மத சிந்தனையை பேசக்கூடாது என்கின்றனர். பள்ளியில் ஒருவரை உரை நிகழ்த்த அழைத்துள்ளனர். அவர் கர்மவினை பற்றி முப்பிறப்பு, இப்பிறப்பு, அதில் நாம் செய்யும் செயல்கள் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை திருமூலர், திருவள்ளுவர் சொன்னது என அனைத்தையும் பேசியிருக்கிறார். உடனே நேற்று பயங்கரவாதியை கைது செய்வது போல 200 போலீஸ், ஒரு ஏடிஜிபி, 4 டிசி, 4 ஏசி வைத்து கைது செய்கின்றனர்.
என்ன நடக்கிறது தமிழகத்தில்? பிரதமரை துண்டு துண்டாக வெட்டுவேன் என சொன்ன ஒரு வன்முறைவாதி அநாகரீகமான தேச விரோதியான தாமு அன்பரசனை ஏன் இந்த காவல்துறையும், அரசும் இன்னும் கைது செய்யவில்லை? சட்டம் அனைவருக்கும் ஒன்று, சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆகவே இந்த அரசாங்கம், டிஜிபி ஆகியோர் உடனடியாக தாமு அன்பரசனை கைது செய்ய வேண்டும். கர்மவினை எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து என்கின்றனர் வள்ளுவர், திருமூலர் அவர்கள்.
திருவள்ளுவர் அதோடு நிறுத்தியிருந்தால் கூட மகேஷ் பொய்யாமொழிக்கு கோபம் வந்திருக்காது, இந்த திருவள்ளுவர் தான் பிறன்மனை நோக்கா பேராண்மை என்கிறார். அங்க தான் இந்த திரவிடியன் ஸ்டாக்கிற்கு உதைக்கிறது. இரண்டு, மூன்று மனைவியை வைத்துக்கொண்டு அவர்களுடன் ஒரே மேடையில் இருக்கும் திரவிடியன் ஸ்டாக் உள்ளனர். அப்படி தரங்கெட்ட வாழ்க்கை வாழும் நாம் ஆட்சியில் இருக்கும் பொழுது, ஒழுக்கத்தை போதிக்கும் வள்ளுவரை பற்றி பேசலாமா இவர்கள் என்று நினைக்கின்றனர் போலும்? என்று கடுமையாக விமர்சித்தார்.
இழிந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்:
மகாவிஷ்ணுவிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். கருணா நிதியை பற்றி பேசியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்படுகிறார். ஆனால் அந்த பாட்டை பலர் காலர் டியூனாக வைத்துள்ளனர். எதற்கு இந்த அரசிற்கு வேண்டாத வேலை, முதலில் இந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு மகாவிஷ்ணுவை விடுதலை செய்யுங்கள். கொள்கை ரீதியிலான உங்கள் சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். ”பிறன்மனை நோக்கா பேராண்மை என்ற வள்ளுவரை பேசியது தான் திராவிடியன் ஸ்டாக்கிற்கு ஆட்சேபனை’. கண்ணதாசன் எழுதிய வனவாசத்தை படியுங்கள், எவ்வளவு ஒழுக்கக்கேடர்கள் திராவிட இயக்க தலைவர்கள் என சொல்லியிருக்கிறார். இழிந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் திரவிடியர்கள். அதனால் உங்களுக்கு திருமூலர் மீது வள்ளுவர் மீது கோபம் என்றார்.
விஜய் கட்சி பாஜகவை பாதிக்காது:
தமிழக ஆளுநர் ரவி உண்மையை பேசியுள்ளார். காரணம் 1300 பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை 10க்கு குறைவு. இந்த மாதிரி மோசமான நிலை இருக்கிறது. இன்று தனியார் பள்ளியின் எண்ணிக்கை கூடுகிறது. அரசு பள்ளியின் எண்ணிக்கை குறைந்து கொண்டு இருக்கிறது. அதனால் தரம் இல்லை என்பது உண்மை. அதை பேசியவரை தவறாக பேசுவது தவறு. எனவே நீங்கள் அவரை பேசக்கூடாது என எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார். தொடர்ந்து விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்தும், அது பிஜேபியின் வளர்ச்சியை பாதிக்குமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பிஜேபி வளர்ச்சியை திராவிடியன் ஸ்டாக் கொள்கை இருக்கிறவர்களால் தடுக்க முடியாது. அதையே பேசுபவர்கள் களத்திற்கு வந்தால் அவர்களது வாக்குகள் சிதறலாம். அது பாஜகவை பாதிக்காது என்றார்.