45 சவரன் நகை 60 ஆயிரம் ரொக்கத்தை அபேஸ் செய்த கொள்ளையர்கள் - 2 நாளில் பிடித்த போலிசாருக்கு எஸ்.பி பாராட்டு
ராமநாதபுரம் அருகே பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் 5 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள மேலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சீனிமுகமது, அகமது அலி ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூட்டி இருந்த வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டியிருந்த சீனி முகம்மது வீட்டின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும், அகமது அலி வீட்டில் புகுந்து 45 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கேணிக்கரை காவல் துறையினர் விசாரணை நடத்தி மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் பெயரில் கொள்ளையர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்ஐ ராமச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதியைச் சேர்ந்த முத்தையா, மணிகண்டன், ரெங்கநாதன் ஆகியோரை முதல் கட்டமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடாந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேனி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் நாம் விசாரித்ததில், இந்த ஐந்து கொள்ளையர்களை நாங்கள் அவ்வளவு எளிதாக கைது செய்துவிட வில்லை, நாங்கள் அவர்களை தேடி சென்ற போது கிராமத்தினர் ஒன்று சேர்ந்து எங்களை கெரோ செய்தனர். அதையும் மீறி அவர்களை கைது செய்து இங்கு அழைத்து வந்ததற்காக எஸ்.பி பாராட்டினார் என விவரித்தனர்.
ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டை கிராமத்தில் துபாயில் வேலை செய்யும் சீனிமுகமது, மலேசியாவில் வேலை செய்யும் அகமது அலி, அக்பர் அலி ஆகியோரது ஆள் இல்லாத வீடுகளில் 108 சவரன் நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் என ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்.ஐ.,க்கள் ராமச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் .
தேனி மாவட்டம் சென்று தேனி அரண்மனை புதுார் முத்தையா 45, மணிகண்டன் 34, ரெங்கநாதன் 48, ஆகிய மூவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தேனி அண்ணா நகரைச் சேர்ந்த ஆனந்த் 30, மதுரை திருப்பரங்குன்றம் அருண்பாண்டி என்ற ஜெட்லி 27, இருவரையும் நேற்று கைது செய்தனர்.இவர்கள் பல ஆண்டுகளாக மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம் கொள்ளை தொடர்பாக தேனி அரண்மனை புதுாரில் கைது செய்ய சென்ற போது, தனிப்படை போலீசாரை ஊர் மக்கள் திரண்டு 'கெரோ' செய்தனர். இருந்தும் திறமையாக செயல்பட்டு கொள்ளையர்களை துணிச்சலுடன் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்கும் பொருட்களை அடகு வைத்து பணம் திரட்டியதோடு, ஜேப்படி திருட்டுகளில் ஈடுபடும் திருப்பரங்குன்றம் அருண்பாண்டி, ஆனந்தும் கைது செய்யப் பட்டு உள்ளனர்.பழைய எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் விற்பது போல் இவர்கள் நோட்டமிட்டு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். நகைகள் முழுமையாக பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும் வீரக்குமார், காளியப்பன் இருவரையும் தேடி வருவதாக தெரிவித்தனர்.