மேலும் அறிய
Advertisement
குமரியில் விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களின் உர உரிமம் ரத்து - ஆட்சியர் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் செயற்கையாக உர தட்டுப்பாடு ஏற்படுத்தி விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் செயற்கையாக உர தட்டுப்பாடு ஏற்படுத்தி விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் நெல், தென்னை, ரப்பர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . விவசாயிகளுக்கு தரமான உரம் தங்கு தடை யின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உர விற்பனையாளர்கள் தங்கள் உர உரிமத்துடன் தங்களுக்கு உரம் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் பெறப்பட்ட"0" படிவங்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும் . " O " படிவங்களை இணைக்காமல் உரம் விற்பனை செய்வது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன்படி கடும் விதி மீறலாகும். மேலும், உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் . மானிய உரங்களை கண்டிப்பாக விற்பனை முனைய எந்திரத்தின் ( பி.ஒ.எஸ் ) மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையை பயன்படுத்தி விற்பனை செய்ய வேண்டும். யூரியா விற்பனை செய்யும்பொழுது விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது . மேலும் , உர விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள உர இருப்பையும் , விலையையும் விலை விபர பலகை எழுதி கடைக்கு முன்பாக வாங்குபவர்களின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
உரங்களை வைத்துக் கொண்டு விவசாயிகளுக்கு இல்லை என்று தெரிவிக்க கூடாது. மேலும் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985க்கு முரணாக செயல்படும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களின் உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொரடப்படும் . விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரம் குறித்த தங்கள் புகார்களை தெரிவிக்க வட்டாரத்தின் பெயர் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குந ர்களின் அலைபேசி அகஸ்தீஸ்வரம் -9443700807 ராஜாக்கமங்கலம் -9442136046 , தோவாளை -9443283954 , திருவட்டார் குருந்தன்கோடு -9442151397 , கோழிப்போர்விளை -9442151397 . 9500982980 , மேல்புறம் -9500982980 , கிள்ளியூர் -8610003288 , முஞ்சிறை -8610003288 . மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் ( தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு ) மற்றும் வேளாண்மை அலுவலர் ( தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு ) - 9443003044 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தொழில்நுட்பம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion