மேலும் அறிய

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

’’வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகாரளித்தால், அவர்கள் எலி மருந்து கொடுக்கின்றார்கள். ஆனால் எலிகள் அதனை சாப்பிடாமல், கதிர்களை மட்டும் சாப்பிட்டு துண்டாக்கி விட்டு சென்று விடுகிறது’’

தஞ்சை மாவட்டத்தில் மின் மோட்டார் மற்றும் ஆறு வாய்க்கால் தண்ணீரை கொண்டு கடந்த மாதம் விதைதெளித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாற்றுகளை பறித்து வயலில் நடவு செய்து வருகின்றனர். குறுவை நடவுப்பணி தற்போது  நடைபெற்று வரும் நிலையில், பயிர்கள் அனைத்தும்  சில நாட்களில் சூல் பருவம் எனும் பால் பருவத்திற்கு வரும் நிலையில் உள்ளது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தஞ்சாவூரை அடுத்த 8 எண் கரம்பை, வண்ணாரப்பேட்டை, அம்மன்பேட்டை, மனக்கரம்பை, கண்டியூர், வடகால், கள்ளப்பெரம்பூர், பனவெளி உள்ளிட்ட  பகுதிகளில் சாகுபடி செய்துள்ள குறுவை பயிர்களில் எலிகள் தொல்லை அதிகரித்துள்ளது. பால் பருவத்திற்கு கதிர்களில் நெல் மணிகள் வருவதற்கு முன்பு இளம் நாற்றுக்கள், இனிப்பாகவும், எலிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சுலபமாக இருக்கும், ருசியுடன் இருப்பதால், நாற்றுக்களை எலிகள் கடித்து வெட்டி துண்டாக்கி விடுகிறது. இதனால், குறுவை சாகுபடி விளைச்சல் கேள்வி குறியாகியுள்ளது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், உடனடியாக  குறுவை நெற் பயிர்களை கடித்து துண்டாக்கும் எலிகளை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி கூறுகையில், ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வந்ததால், குறுவை சாகுபடி பணி தொடங்கப்பட்டது. ஆனால், வரப்புகளை போதுமான அளவில் சீர் செய்யாமலும்,  எலி வளைகளை உடைத்து  தாய் எலிகளையும், குட்டிகளையும் சேகரித்து அழிக்காமல் விட்டதால், எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.  இதனால் எலிகள் கட்டுப்படுத்த முடியாமல் பெருகியதால்,  குறுவை சாகுபடி கேள்வி குறியாகியுள்ளது. இது குறித்து வேளாண்மைதுறை அலுவலர்களிடம் புகாரளித்தால், அவர்கள் எலி மருந்து கொடுக்கின்றார்கள். ஆனால் எலிகள் அதனை சாப்பிடாமல், கதிர்களை மட்டும் சாப்பிட்டு துண்டாக்கி விட்டு சென்று விடுகிறது.

இதனையடுத்து எலிகளை கிட்டி வைக்கு பிடிக்க விவசாயிகள் முடிவு செய்து, ஒரத்தநாடு தாலுக்கா உளூரிலுள்ள எலி கிட்டி வைப்பவர்களை அழைத்து வந்து, ஒரு எலியை பிடிக்க 30 ரூபாய் கொடுத்து, சாகுபடி வயலில் வைத்து வருகின்றோம். குறுவை சாகுபடி செய்துள்ள வயல்களில் கதிர்கள் கடித்திருப்பதை வைத்து போதுமான அளவில் கிட்டி வைக்கப்படும். இதில் கிட்டியில் எலி சிக்கினால், அந்த எலி உயிருடன் இருந்தால், உணவுக்காக எடுத்து சென்று விடுவார்கள். இறந்து விட்டால், கரையில் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதனை பறவைகள் தின்று விடும்.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 35  வரை நெல் மூட்டைகள் கிடைக்கும். ஆனால் எலிகள்  தொல்லையால் ஒரு ஏக்கருக்கு சுமார் 20 மூட்டை கிடைப்பதே அரிதாகும். இதனால் செலவு செய்த தொகை அனைத்தும் வீணாகும்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளம் வந்த போது, வயல், வரப்புகளில் தண்ணீர் நிரம்பி ஒடியது. அதனால் வரப்புகளிலுள்ள எலிகள் அனைத்து இறந்தன. அந்த வருடம் எலி தொல்லை இல்லாமல், சாகுபடி நன்றாக இருந்தது.  அதன் பிறகு வரப்புகளில் எலிகளின் பெருக்கம் அதிகமாகிவிட்டது.

குறுவை சாகுபடியை குலைக்கும் எலிகள்- குலைநடுக்கத்தில் டெல்டா விவசாயிகள்...!

எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள், குறுவை சாகுபடியில் எலிகளின் தொல்லை அதிகமாக  இருப்பதால், உடனடியாக தேவையான ரசாயன உரங்களையும், கிட்டி வைப்பவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக போதுமான கூலி கொடுத்து, வயல்களில் உள்ள எலிகளை பிடிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்தும் பயிரும் நாசமாகும் என்றார்.

தலைப்பு செய்திகள்

பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget