தெரு நாய் கடித்து கூலித் தொழிலாளி பரிதாப மரணம் - அதிர்ச்சி தரும் காரணம்
நெல்லையில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கூலித் தொழிலாளி ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் தெரு நாய் கடித்து தடுப்பூசி போடாமல் இருந்த கூலி தொழிலாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய் கடித்து பின் தடுப்பூசி போடாததால் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு ஐயப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். அவருக்கு வயது 30. இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஐயப்பன் வேலைக்கு சென்ற இடத்த்தில், அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனை கண்டுகொள்ளாமல் ஐயப்பன் அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது. நாய் கடித்த இடத்தில் காயம் ஏற்பட்டு அதை சரியாக கவனிக்காமல் விட்டதாகக் கூறப்படுகிறது.
ரேபிஸ் நோய் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு
ஐயப்பன் தெரு நாய் கடித்து ரேபிஸ் ஊசி போடாததால் அவரின் உடல்நிலை மோசமானது. இதனைத்தொடர்ந்து, ஐயப்பன் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், ரேபிஸ் நோயின் தாக்கம் அதிகமானதால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கூலித் தொழிலாளி உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேபிஸ் தடுப்பூசியின் அவசியம்
ரேபிஸ் நோய் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். நாய் கடித்த உடனே தடுப்பூசி போட்டுக்கொள்வது உயிரிழப்பைத் தடுக்க உதவும்.
ரேபிஸ் நோயின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு
நரம்பு மண்டல பாதிப்பு: ரேபிஸ் வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து, மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுவே நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
உயிரிழப்பு: காய்ச்சல், தலைவலி, குழப்பம், வாந்தி போன்ற அறிகுறிகள் ரேபிஸ் நோயின் அறிகுறிகளாகும். இதனால் சிகிச்சை அளிப்பது கடினம். அப்போது, உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தடுப்பு: நாய் கடித்தவுடன் உடனடியாக டாக்டரிடம் சென்று தடுப்பூசி மற்றும் ரேபிஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது உயிரிழப்பைத் தடுக்க உதவும்.
முக்கியத்துவம்
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்தால், நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்கலாம்.





















