![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
World Rabies Day 2023: இன்று உலக ரேபிஸ் தினம்.. இதெல்லாம் உங்களுக்கு தெரியணும்..
World Rabies Day 2023: இன்று உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கம் மற்றும் ரேபிஸ் நோய் குறித்துப் பார்க்கலாம்.
![World Rabies Day 2023: இன்று உலக ரேபிஸ் தினம்.. இதெல்லாம் உங்களுக்கு தெரியணும்.. World Rabies Day 2023 History significance facts and more about this day World Rabies Day 2023: இன்று உலக ரேபிஸ் தினம்.. இதெல்லாம் உங்களுக்கு தெரியணும்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/1b7f3d235a7fed759a3ec9b68af28b8a1695904841082571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் தேதி ரேபிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக ரேபிஸ் தினம் என்பது ஒரு சிறப்பு சுகாதார நிகழ்வாகும். ரேபிஸ் எவ்வாறு பரவுகிறது மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொடிய நோய்களில் ஒன்றான ரேபிஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், உலகெங்கிலும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்த மக்களை ஒன்றிணைத்தல் இந்த தினத்தை கடைபிடிப்பதன் நோக்கம் ஆகும்.
வரலாறு
உலக ரேபிஸ் தினத்தின் வரலாறு, ரேபிஸ் கட்டுப்பாட்டுக்கான உலகளாவிய கூட்டணி இந்த முக்கியமான நாளை நிறுவிய காலத்திலிருந்து தொடங்குகிறது. 2007 -ல், இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டது. உலக ரேபிஸ் தினத்தைக் கடைப்பிடிப்பதற்கான மற்றொரு முக்கிய காரணம், ரேபிஸிற்கான முதல் தடுப்பூசியை உருவாக்கிய பிரெஞ்சு வேதியியலாளரும் நுண்ணுயிரியல் நிபுணருமான லூயிஸ் பாஸ்டர் இறந்தது செப்டம்பர் 28-ஆம் தேதி தான். இந்த முக்கிய நபரின் நினைவு நாளைக் குறிக்கும் வகையில் உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் அவரது முன்னிலைப்படுத்தவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
உலக ரேபிஸ் தினம் 2023: தீம்
2023 -ஆம் ஆண்டின் ரேபிஸ் தினத்தின் கருப்பொருள் “அனைவரும் ஒரு நோக்கத்திற்காக... அனைவருக்குமான சுகாதாரம் என்பது மனித விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் காதரத் துறைகளைச் சேர்ந்த தொழில்முறை குழுக்களின் பங்களிப்பு, ஒத்துழைப்புடன் ஒரு இடைநிலை மற்றும் பல்துறை அணுகுமுறையை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மையமாக கொண்டது.
உண்மைகள்
ரேபிஸ் 100% தடுக்கக்கூடிய நோயாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 60,000 பேர் இந்த நோயால் இறக்கின்றனர்.
ரேபிஸ் என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீரில் இருந்து மக்களுக்கு பரவும் ஒரு கொடிய வைரஸ் ஆகும். ரேபிஸ் வைரஸ் பொதுவாக பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தால் பரவுகிறது.
ஒரு நபருக்கு ரேபிஸின் அறிகுறிகள் தென்படத் தொடங்கியவுடன், நோய் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
வௌவால்கள், கொயோட்டுகள், நரிகள், ரக்கூன்கள் மற்றும் ஸ்கங்க்ஸ் போன்ற விலங்குகள் மூலம் அமெரிக்காவில் ரேபிஸ் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பார்க்கப்படுகிறது. தெருநாய்கள் மக்களுக்கு வெறிநாய்க்கடியை பரப்பும் வாய்ப்பு அதிகம்.
ரேபிஸின் முதல் அறிகுறிகள் காய்ச்சலை போன்றதாக இருக்கலாம். மேலும் இது நீடிக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க
பாஜகவுடன் கூட்டணி.. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் வரிசையில் இரண்டாக உடையும் தேவகவுடா கட்சி
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)