மேலும் அறிய

நெல்லை 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு - சட்டப்பேரவை தலைமை கொறடா

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்த பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாதத்திற்கு இரண்டு மாவட்டங்கள் வீதம் சென்று சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு செய்ய திட்டம் - தமிழக சட்டப்பேரவை தலைமை கொறடா கோவி செழியன்

தமிழக சட்டமன்ற மனுக்கள் குழு மாவட்ட வாரியாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் பணியை நேற்றைய தினம் தொடங்கியுள்ளது.தமிழக சட்டபேரவை அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற மனுக்கள் குழு தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2 நாள் பயணமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தலைமையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான ஆய்வு பணியினை மனுக்கள் குழுவினர் மேற்கொண்டனர். நெல்லை மாவட்டத்திலுள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 263 மனுக்கள் மீது அதிகாரிகள் ஆய்வு செய்து 74 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த துறை சார்ந்த அதிகாரியிடம் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் அரசு தலைமை கொறடா கோவி செழியன் கூறும் பொழுது,

நெல்லை 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு - சட்டப்பேரவை தலைமை கொறடா

தமிழக சட்டமன்ற  மனுக்கள் குழு   கூடி மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி இதுவரை 100க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இரண்டு தினங்களாக நடந்த மனுக்கள் மீதான ஆய்வு கூட்டத்தில் பொது மக்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, நெல்லை மாவட்டத்தில் பெறப்பட்ட 263 மனுக்களில் 74 மனுக்கு பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது 7 மனுக்களை மீண்டும் மறு ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் சமுதாய நலக்கூடம்  அமைத்தல், கழிப்பறை, சாலை மேம்பாடு உள்ளிட்டவைகளில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்ய மனுக்கள் குழு அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளது. பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து பெறப்பட்ட மனுக்களை மாதம் 2 மாவட்டம் வீதம் ஆய்வு செய்ய மனுக்கள் குழு திட்டமிட்டுள்ளது. அடுத்த கட்டமாக கோவை,  நீலகிரி மாவட்டங்களிலும் அதனை தொடர்ந்து கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நெல்லை 62 மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு - சட்டப்பேரவை தலைமை கொறடா

பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கவும், தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், மனுக்கள் குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் அமுல் கந்தசாமி,கே.பி.சங்கர், கிரி, மதியழகன்,சந்திரன் ,மாங்குடி மற்றும் பிரபாகர ராஜா , மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், மனுதாரர்கள்   கலந்து கொண்டனர்

தலைப்பு செய்திகள்

CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget