TTV Dinakaran: "கருணாநிதிக்கு பேனா வைக்கட்டும்.. அவர்கள் கட்சி சார்பில் வைக்கட்டும்." - தினகரன்
திமுக தோல் மீது ஏறி சவாரி செய்துவிட்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என சொல்வதற்கு தான் இன்னொரு கட்சி தோலில் ஏறி உள்ளது. இறங்கி நின்று போட்டி போட்டால் தான் தெரியும்..
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜி. ராமலிங்கத் ஜோதி இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிக்காக பெரிய முயற்சி எடுப்போம். மக்கள் விரோத இந்த தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் அ.ம.மு.க.வின் குறிக்கோள். அதற்காக இரவு பகல் பாராது உழைக்க அ.ம.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராக உள்ளனர்.
மறைந்த கருணாநிதி மிகப்பெரிய அறிஞர், அவருக்கு பேனா நினைவு சின்னம் வைப்பது தவறில்லை. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியுள்ள இந்த நேரத்தில் பேனா சின்னம் வைப்பது தான் தவறு வேண்டுமென்றால், அவர்கள் கட்சி சார்பில் பேனா நினைவுச்சினத்தை வைக்க வேண்டும். கடலில் வைத்து சுற்றுச்சூழல் பாதிக்காமல் அறிவாலயத்திலோ அல்லது வேறு இடத்திலயோ வைக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம். தி.மு.க. என்ற அரக்கனை வெளியேற்ற அ.தி.மு.க. தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? என்பதை பார்ப்போம். 2017 இரண்டு பேருக்கும் நானும் ஓபிஎஸ்ம் இரட்டை இலை சின்னத்திற்காக மனு செய்தோம். அப்போது தேர்தல் ஆணையம் இருவருக்கும் இல்லை என சொல்லி முடிவெடுத்தது மாதிரி எடுக்கலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் வகையில் பி.ஜே.பி. செயல்பட்டு வந்தால் காங்கிரஸ் கட்சியினருக்கு ஏன் கோபம் வருகிறது? தி.மு.க. தோல் மீது ஏறி சவாரி செய்துவிட்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என சொல்வதற்கு தான் இன்னொரு கட்சி தோலில் ஏறி உள்ளது. இறங்கி நின்று போட்டி போட்டால் தான் தெரியும் என விமர்சித்தார். தேர்தலில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் கையெழுத்து போட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது தான் நிலைமை, இல்லையென்றால் சின்னம் முடக்கப்படும்.
ஒரு சிலரின் சுயநலத்திற்காக அ.தி.மு.க. கட்சி மிகவும் பலவீனமடைந்து உள்ளது. இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இது சுயநலத்தோடு பண திமிரில் சிலர் செயல்படுகிறார்கள். இதனால்தான் அதிமுக இயக்கத்தை விட்டு வெளியேறி நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் போட்டியிடுகிறோம். கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் வருங்காலத்தில் வெற்றி வாய்ப்பு கிடைப்பதற்காக முழு நம்பிக்கையுடன் போராடியிருக்கிறோம். காலம் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். தி.மு.க.வை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் இணைகின்ற காலம் வரும்" என தெரிவித்தார்