மேலும் அறிய

Gulf of Mannar | ஆக்சிஜன் அளவை குறைக்கும் பாசி, பச்சை பசேலென மாறும் கடல்.. மன்னார் வளைகுடா பகுதியில் அதிர்ச்சி

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் பவளப்பாறைகள், கடல் புற்கள் நிறைந்த பல்லுயிர் பெருக்கத்துக்கு உகந்த பகுதியாகும்.

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியில் சுமார் 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு படந்து உள்ள பாசி படலத்தால் பவளப்பாறைகள் அழிவு அதிர்ச்சி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

                                  Gulf of Mannar | ஆக்சிஜன் அளவை குறைக்கும் பாசி, பச்சை பசேலென மாறும் கடல்.. மன்னார் வளைகுடா பகுதியில் அதிர்ச்சி
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் பவளப்பாறைகள், கடல் புற்கள் நிறைந்த பல்லுயிர் பெருக்கத்துக்கு உகந்த பகுதியாகும். இந்த பகுதியை யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2001 ஆண்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக அறிவித்தது. இந்த உயிர்க்கோள காப்பகத்தில் 4 ஆயிரத்து 223 வகையான கடல் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. இதில் 117 வகையான பவளப்பாறைகள், 14 வகையான கடல் புற்கள், 181 வகையான கடல் பாசிகள், 1147 வகையான மீன்கள், கடல் பசுக்கள்,158 வகை கணுக்காலிகள், 856 வகை மெல்லுடலிகள் உள்ளன. இந்த உயிர்க்கோள காப்பகம் பருவநிலை மாற்றத்தால் அவ்வப்போது பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்துக்கு ஒரு பாசிப்படலம் புதிய அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது.
 
நாக்டிலுகா சைலன்டிலன்ஸ் என்ற பாசி படலம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடிய செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பாசிப்படலம் வேகமாக மன்னார் வளைகுடா பகுதியில் பரவி வருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதன் முறையாக இந்த பாசிப்படலம்  மன்னார் வளைகுடாவில் கீழக்கரை கடல் பகுதியில் வாளை, தலையாரி ஆகிய தீவு பகுதிகளில் கண்டறியப்பட்டது. இந்த பாசி படர்ந்ததால் அந்த பகுதி முழுவதும் பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. அப்போது ஏராளமான உயிரினங்கள் இறந்தன. இந்த பாசி படலம் வேகமாக வளரக்கூடியது. இந்த பாசி கடல் மேற்பரப்பில் பச்சை பசேலென படர்ந்து இருப்பதால், கடல் நீரில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. மீன்களின் செதில்களையும் பாதிக்கிறது.

                                   Gulf of Mannar | ஆக்சிஜன் அளவை குறைக்கும் பாசி, பச்சை பசேலென மாறும் கடல்.. மன்னார் வளைகுடா பகுதியில் அதிர்ச்சி
கடந்த 2008-ம் ஆண்டு 17 கிலோ மீட்டர் கடலோர பகுதியிலும், 2019-ம் ஆண்டு 17 கிலோ மீட்டர் தூரமும், 2020-ம் ஆண்டு 100 கிலோ மீட்டர் தூரமும் பாதிக்கப்பட்டது. தற்போது 2021-ம் ஆண்டு இந்த பாசியின் தாக்கம் இதுவரை இல்லாத அளவு மிகவும் அதிகரித்து உள்ளது. ராமேசுவரம் முதல் புன்னக்காயல் வரை 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அதிக அளவில் மீன்கள், இறால், நத்தை, கணுக்காலிகள், கடல் அட்டை, கடல் வெள்ளரி, கடல் பாம்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இறந்த நிலையில் தீவுகளில் கரை ஒதுங்கி வருகின்றன. குறிப்பாக குருசடை, மனோலிபுட்டி, மனோலி தீவுகளில் ஒதுங்கி உள்ளன. பவளப்பாறைகள் வெளிரும் நிகழ்வை போன்று, இந்த பாசிகளும் பவளப்பாறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து உள்ளன. ஆக்சிஜன் அளவு குறைவதால் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் பவளப்பாறைகள் பெரும் சேதம் அடைந்துள்ளது. 
 
இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வனத்துறை மற்றும் தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் பாசியின் பரவல் தன்மை மற்றும் பவளப்பாறைகளின் நிலை குறித்து கடலுக்கு அடியில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் பகுதியை சேர்ந்த குருசடை தீவு பகுதியில் சுமார் 500 சதுர மீட்டர் பரப்பில் 102 பவளப்பாறை கூட்டுயிரிகள், மனோலிபட்டி தீவு பகுதியில் 270 சதுர மீட்டர் பரப்பில் 211 பவளப்பாறை கூட்டுயிரிகள், மனோலி தீவு பகுதியில் சுமார் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 422 பவளப்பாறை கூட்டுயிரிகள் அழிந்து உள்ளன. இதில் அக்ரோபோரா வகை பவளப்பாறை அதிக அளவில் அழிவை சந்தித்து உள்ளன. இதில் 5 சென்டி மீட்டர் முதல் 160 சென்டி மீட்டர் வரை அகலம் கொண்ட பவளப்பாறைகளும் அழிந்து உள்ளன.

                                  Gulf of Mannar | ஆக்சிஜன் அளவை குறைக்கும் பாசி, பச்சை பசேலென மாறும் கடல்.. மன்னார் வளைகுடா பகுதியில் அதிர்ச்சி
ஏற்கனவே பவளப்பாறைகளுக்கு பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது. தற்போது இந்த பாசியும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. ஆகையால் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கு காரணமாக அமைந்து உள்ள பவளப்பாறைகளுக்கு இடையூறுகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். இறந்த பவளப்பாறைகளை மறுஉருவாக்கம் செய்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget