மேலும் அறிய

Exclusive: நெல்லை மாநகர திமுகவில் மேலும் பிளவா? 2 அணி 5 அணியாக மாறியதா? - போட்டி வேட்பாளர் கூறுவது என்ன?

”தற்போது மாவட்ட செயலாளர் அணி, எம்எல்ஏ அணி, முன்னாள் எம்எல்ஏ அணி, மாநகர செயலாளர் அணி, இவர்கள் யாரையும் சேராத அணி என 5 அணியாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது”

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில் 44 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்தவர்களும், 7 பேர் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், 4 பேர் அதிமுகவை சேர்ந்தவர்களும் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்குமிடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் மேயர் சரவணன் தலைமை அறிவுறுத்தலின் படி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாநகராட்சியில் புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. 

தேர்தலில் ஏற்பட்ட பரபரப்பு:

தேர்தலுக்கு முந்தைய நாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்ற கிட்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் போட்டியின்றி தேர்தலில் ஒருமனதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் தேர்தல் அன்று காலை 10 மணிக்கு மேல் மேயர் வேட்பாளரை எதிர்த்து 6 வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் திடீரென வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேயர் வேட்பாளரை எதிர்த்து திமுகவில் இருந்த வேட்பாளர் ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு நடந்து முடிந்த தேர்தலில்  திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் 30 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் - 23 வாக்குகளும் பெற்ற நிலையில் அதிமுகவை சேர்ந்த ஒருவர் வராத நிலையில் செல்லாத வாக்காக 1 பதிவானது.

கட்சிக்குள் தொடரும் பிளவு?

ஏற்கனவே திமுகவில் ஏற்பட்ட கோஷ்டிபூசல் காரணமாக  மாநகராட்சியில் பல கோப்புகள் தேங்கி கிடப்பதோடு மக்கள் பணிகள் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போதைய மேயர் தேர்ந்தெடுப்பதில் அமைச்சர்கள் மிகத்தீவிரமாக களம் இறங்கி செயல்பட்டனர். ஆனால் தலைமை நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து திமுகவில் இருந்த ஒருவரே போட்டியிட்டதோடு அவருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்தவர்களே வாக்கு செலுத்தியது கட்சிக்குள் மேலும் பிளவு இருப்பதையே காட்டுகிறது. கட்சி பணிகள் எவ்வாறு நடக்கும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு முன் மாவட்ட செயலாளர் அணி, அவரது எதிர்ப்பு அணி என்று இருந்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் அணி, எம் எல் ஏ அணி, முன்னாள் எம் எல் ஏ அணி, மாநகர செயலாளர் அணி, இவர்கள் யாரையும் சேராத அணி என 5 அணியாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆதங்கத்தில் தான் போட்டியே தவிர கட்சிக்கு எதிராக ஒரு போதும் இல்லை

இதனிடையே இதுகுறித்து ஏபிபி நாடு மூலம் நாம் எதிர்த்து போட்டியிட்ட கவுன்சிலர் பவுல்ராஜை தொடர்பு கொண்டு பேசிய போது, "முதலில் மேயரை சரவணனை எதிர்க்கும் போது என்னை கட்சியில் இருந்து நீக்கினர். அப்போது எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது.  ஏனென்றால் மாவட்ட செயலாளரை மாற்றியதே மாநகராட்சி பிரச்சினைக்காக தான். ஆனால் பொறுப்பு மாவட்ட செயலாளர் மாநகராட்சி பிரச்சினையை முறையாக கையாள அவர் தவறி விட்டார். இதனை தலைமை புரிந்து கொள்ளவில்லை. இங்கு உள்ளவர்களின் தகவல்படியே தலைமை என்னை நீக்கியது.  மன்னிப்பு கடிதம் கொடுத்து 6 மாதமாகியும் தற்போது வரை தலைமை என்னை ஏற்கவில்லை. ஆனால் நான் தற்போது வரை மாற்று கட்சிக்கு செல்ல விரும்பவில்லை. திமுகவின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறேன்.  எனது கோபம் ஆதங்கம் அனைத்தும் கட்சியில் இருந்து நீக்கிய என்னை கட்சியில் இணைக்காதது தான். அப்படி இணைத்திருந்தால் கட்சிக்கு கட்டுப்பட்டு நான் போட்டியிடாமல் நின்று இருப்பேன். அதனால் தான் போட்டியிட்டேன். அதோடு இந்த தேர்தலை ஒரு ஆரோக்கியமான தேர்தலாக தான் அனைவரும் பார்க்க வேண்டும். போட்டியின்றி தேர்வானதை விட போட்டியிட்டு அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றியிருப்பதை ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்க வேண்டும். நான் திமுகவிற்கு எதிராக செயல்பட ஒரு நாளும் நினைத்ததில்லை.. தொடர்ந்து தற்போதைய மேயருடன் இணைந்தே கட்சியில் இல்லாவிட்டாலும் கட்சிக்காக பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார். 

எது எப்படியோ இனி வரும் காலங்களில் மாநகராட்சி கூட்டங்கள் சுமூகமாக நடந்து மக்கள் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவால் மீண்டும் நெல்லை மாநகராட்சியில் சர்ச்சை ஏற்பட்டால் அது எதிர்வரும் தேர்தல்களிலும் எதிரொலிக்கும், அது நடைபெறா வண்ணம் தலைமை  சரிசெய்ய வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget