திருச்செந்தூரில் 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் - ஏபிபி நாடு யூடியூப் தளத்தில் நேரலை...!
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களாக பக்தர்கள் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 6ஆம் நாளான இன்று சூரம்சம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாரதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயராட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரத்திற்கு தயாராகும் முருகன், கோயில் முகப்பில் எழுந்தருள்கிறார்.
பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது. அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் இன்றைக்கும் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது பழமொழி. இன்றைய தினம் கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் சிக்கலில் பார்வதி தேவியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்துக்கொள்கிறார்.
’’இந்த ஆண்டு எனது பிறந்தநாளை கொண்டாட எனக்கு விருப்பம் இல்லை’’ - அமைச்சர் நேரு
.
திருச்சி மாவட்டத்தில் 8 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. எனவே, வழக்கமாக பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடக்கிறது. இதற்காக சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் 3 பக்கமும் தகரத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை வழியாக பக்தர்கள் வரமுடியாதபடி நாழிக்கிணற்றில் இருந்து கடல்நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் போலீசார் கண்காணிக்க வசதியாக, கண்காணிப்பு கோபுரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுதவிர போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை நேரில் காண இந்த லிங்கை க்ளிக் செய்க
’திருச்செந்தூர் சூரசம்ஹார பெருவிழா’ மாலை 4.30 மணி முதல் தொடர் நேரலை..!