மேலும் அறிய

Thoothukudi Airport : ‘தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டிற்கு விமான சேவை எப்போது?’ மத்திய அரசு அளித்த பதில் இதுதான்..!

’தூத்துக்குடி விமான நிலையம் ஆண்டுக்கு 21 லட்சம் பயணிகளை கையாளும் வகையிலும் ஒரு மணி நேரத்திற்கு 1,440 பயணிகள வந்து செல்ல ஏதுவாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது’

தமிழ்நாட்டின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாக திகழும் தென் மாவட்டங்களுக்கென தற்போது மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டிருந்தாலும் முத்து நகரமாக விளங்கும் தூத்துக்குடி விமான நிலையம் உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே செய்து வருகிறது. அதுவும் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயர்த்தி மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களுக்கும் விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தென் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் விமான சேவை தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது.

அதிமுகவின் இன்பதுரை எழுப்பிய கேள்விகள்

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி விமான நிலையம் தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா ? தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பெரிய ரக விமானங்கள் இங்கிருந்து புறப்படும் சூழலை ஏற்படுத்த மத்திய அரசிடம் ஏதும் திட்டம் உள்ளதா ? ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விமானங்களை தூத்துக்குடியில் இருந்தும் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இயக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா எனவும் கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.

தூத்துக்குடி விமான நிலையம் குறித்து மத்திய அரசு சொன்னது என்ன ?

அதற்கு பதில் அளித்திருக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஏடிஆர் – 72 வகை விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், இண்டிகோ நிறுவனம் மட்டும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவிற்கு வாரத்திற்கு 70 விமான சேவைகளை இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தூத்துக்குடி விமான நிலையம் ஆண்டுக்கு 21 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் புதிய திறன் கொண்ட முனைய கட்டடம் மேம்படுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஒரு மணி நேரத்திற்கு 1.440 பயணிகள் வந்து செல்ல ஏதுவான கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பெரிய விமானங்கள் இயக்கம் எப்போது ?

குறிப்பாக, பெரிய ரக விமானங்கள் இயக்கப்படுவதற்காக 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் சேவையும் தொடக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 1994ஆம் ஆண்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை தாராளமயமாக்கப்பட்டதிலிருந்து விமான நிறுவனங்கள் தங்களின் செயல்பாடு மற்றும் வணிக ரீதியாக வருவாய் ஈட்டக்கூடிய சாத்தியகூறுகள் அடிப்படையில் எந்த வகை விமானங்களை எந்தெந்த விமான நிலையங்களுக்கு இயக்க வேண்டும் என்ற முடிவை அவர்களே எடுத்து வருவதாகவும், எனவே புதிய விமான சேவைகள் தொடர்புடைய முடிவும், பெரிய விமானங்களை இயக்குவது பற்றிய முடிவும் அந்தத விமான சேவை நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget