மேலும் அறிய

திருச்சுழி அருகே 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

மணவராயனேந்தல் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11-ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத்ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் நேரில் ஆய்வு செய்தனர்.

திருச்சுழி அருகே 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ்இடையங்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத்தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம். சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

திருச்சுழி அருகே 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கவேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Embed widget