Tiruchendur Spl Buses:முருக பக்தர்களே கவலை வேண்டாம்!திருச்செந்தூர் குடமுழுக்கு விழா-400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில்:
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டும் குடமுழுக்கும் தமிழநாடு அரசு செய்து வருகிறது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கூடமுழுக்கு விழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த நிலையில் வரும் ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி குடமுழுக்கு நடைப்பெறவுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. இது அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு திருவிழா 07.07.2025 அன்று நடைபெறவுள்ளதால். பொதுமக்கள் வரும் 04.07.2025 முதல் 08.07.2025 வரையிலான நாட்களில் இவ்விழாவிற்கு, தமிழ் நாட்டில் ஊர்களிலிருந்து 3 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக வரும் 04.07.2025 மதியம் முதல் 06.07 2025 மதியம் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள்:
மேலும், இவ்விழாவினை முன்னிட்டு. திருச்செந்தூரில் திருநெல்வேலி சாலையில் குமாரபுரம், நாகர்கோவில் சாலையில் தெப்பக்குளம், தூத்துக்குடி சாலையில் ITI வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருத்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து, திருச்செந்தூர் கோவில் வாசல் வரை செல்வதற்கு வசதியாக 30 கட்டணமில்லா சிறப்புப் பேருத்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் பங்கேற்க வசதியாக. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகக சார்பில் தினசரி சென்னை திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை மதுரை. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பேருத்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு விவரங்கள்:
இந்நிலையில், 06.07.2025. 07.07.2025 மற்றும் 08.07.2025 ஆகிய நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு. தங்களது பயணத்திற்கு https://www.instc.in/ to TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளர்.
எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது






















