மேலும் அறிய

கன்னியாகுமரி கடலில் அமைக்கப்படும் கண்ணாடி பாலம்: ஆய்வு செய்தபின் அமைச்சர் சொன்ன தகவல்

திருவள்ளுவர் சிலை பக்கத்திலும் விவேகானந்தர் பாறை நினைவகத்தின் பக்கத்திலும் கான்கிரீட் தூண்கள் போடும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

37 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரி கடலில் அமைக்கப்படும் கண்ணாடி பாலம் வரும் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக, பாலம்  பணிகளை ஆய்வு செய்த பின் கன்னியாகுமரியில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார்.

கன்னியாகுமரி கடலில் அமைக்கப்படும் கண்ணாடி பாலம்: ஆய்வு செய்தபின் அமைச்சர் சொன்ன தகவல்

சர்வதேச சுற்றுலா பயணிகள் வரும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில், கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பகுதியை விட திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதி பாறைகள் நிறைந்து காணப்படுவதால்  கடல் நீர்மட்டம் தாழ்வு மற்றும் உயர்வு  காரணமாக படகு சேவை பெரும்பாலான நாட்கள் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

கன்னியாகுமரி கடலில் அமைக்கப்படும் கண்ணாடி பாலம்: ஆய்வு செய்தபின் அமைச்சர் சொன்ன தகவல்

இதனை சரிசெய்யும் விதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் விதமாக  37 கோடி ரூபாய் செலவில் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலம் கொண்ட கண்ணாடி கூண்டு பாலம் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைகளில் கண்ணாடி பாலத்தை நிலை நிறுத்தும் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.  இதுவரை முடிவடைந்துள்ள  பாலம் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு  படகில் சென்று நேரில் இன்று  ஆய்வு செய்தார். அங்கு படகுகள் நிறுத்தும் பகுதிகள், தூண்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதி உள்ளிட்டவைகளையும்  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  ஆய்வின் போது, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

அதன் பின் செய்தியாளர்களை  சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறும் போது, கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் போதுமான படகு இறங்கு தளம் இல்லாமல் இருந்த காரணத்தால் சுமார் 33 கோடி ரூபாய் செலவில் படகு இறங்குதளம் அமைக்கும் நடந்து வருகிறது. இங்கு படகு இறங்குதளம் அமைப்பதால் மீனவர்களுக்கு  எந்தவித பாதிப்பும் வராது எனவும், அனைவரும் எதிர்பார்க்கும் கன்னியாகுமரி கண்ணாடி பாலம் 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்டது இதில் நடுவில் 2½ மீட்டர் கண்ணாடி இழையால்  பாலம் அமைக்கப்படுகிறது எனவும்  பணிகள்  டிசம்பரில் முடிவடைந்து ஜனவரி மாதம் முதலமைச்சரால் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கன்னியாகுமரி கடலில் அமைக்கப்படும் கண்ணாடி பாலம்: ஆய்வு செய்தபின் அமைச்சர் சொன்ன தகவல்

தற்போது திருவள்ளுர் சிலை பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு, திருவள்ளுவர் சிலை பக்கத்திலும் விவேகானந்தர் பாறை நினைவகத்தின் பக்கத்திலும் கான்கிரீட் தூண்கள் போடும் பணிகள் நிறைவடைந்துள்ளது. RDSO (ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு) அங்கீகரிக்கப்பட்ட M/S மெட்டல் ஸ்கோப் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், பாண்டிசேரி நிறுவனத்தில் ஆர்ச் பீம்கள், குறுக்கு பீம்கள், நீள பீம்கள் மற்றும் டை பீம்கள் ஆகிய கட்டமைத்தல் பணிகள் நிறைவு பெற்று, Network Arch முழுமையாக பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது.மேலும் முழுமையாக பொருத்தப்பட்ட எஃகு அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பணியிடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள எஃகு அலகுகள், இருபுறமும் அமைந்துள்ள கான்கிரீட் தூண்கள் மீது பொருத்தப்படும். எஃகு அலகுகளை பொருத்துவதற்கான அடித்தள பணிகள் முடிந்து, அனைத்து பணிகளும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IRCTC Crash :ஏய் டாமி எந்திரி.. தட்கல் நேரத்தில் மீண்டும் காலை வாரிய ரயில்வே டிக்கெட் இணையத்தளம்!
IRCTC Crash :ஏய் டாமி எந்திரி.. தட்கல் நேரத்தில் மீண்டும் காலை வாரிய ரயில்வே டிக்கெட் இணையத்தளம்!
Adani TNEB Tender: திடீரென ரத்தான அதானி டெண்டர்! அதிரடி காட்டிய தமிழக அரசு... காரணம் என்ன?
Adani TNEB Tender: திடீரென ரத்தான அதானி டெண்டர்! அதிரடி காட்டிய தமிழக அரசு... காரணம் என்ன?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IRCTC Crash :ஏய் டாமி எந்திரி.. தட்கல் நேரத்தில் மீண்டும் காலை வாரிய ரயில்வே டிக்கெட் இணையத்தளம்!
IRCTC Crash :ஏய் டாமி எந்திரி.. தட்கல் நேரத்தில் மீண்டும் காலை வாரிய ரயில்வே டிக்கெட் இணையத்தளம்!
Adani TNEB Tender: திடீரென ரத்தான அதானி டெண்டர்! அதிரடி காட்டிய தமிழக அரசு... காரணம் என்ன?
Adani TNEB Tender: திடீரென ரத்தான அதானி டெண்டர்! அதிரடி காட்டிய தமிழக அரசு... காரணம் என்ன?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
Tamilnadu Roundup: ஆண்டின் கடைசி நாள்! 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
Tamilnadu Roundup: ஆண்டின் கடைசி நாள்! 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
"ஒரே கல்லில் இரண்டு மாங்கா" சாமுண்டீஸ்வரிக்கு எதிராக சந்திரகலா சதி!
Year Ender 2024 Auto: எங்கும் ஈவி மயம்..! ஆண்டின் சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள், ரேஞ்ச் தொடங்கி அம்சங்கள் வரை..!
Year Ender 2024 Auto: எங்கும் ஈவி மயம்..! ஆண்டின் சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள், ரேஞ்ச் தொடங்கி அம்சங்கள் வரை..!
Embed widget