மேலும் அறிய

மகன் அனிதா ஆர்.ஆனந்த மகேஷ்வரனை லைம் லைட்டுக்கு கொண்டு வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

வெற்றி ஒன்றே நமது குறிக்கோள். அது சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. எதிர்த்து நிற்பவர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

தேர்தல் நேரத்தில் தவறு செய்யும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

மகன் அனிதா ஆர்.ஆனந்த மகேஷ்வரனை லைம் லைட்டுக்கு கொண்டு வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்களவை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களான அனிதா ஆர்.ஆனந்த மகேஸ்வரன், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகன் அனிதா ஆர்.ஆனந்த மகேஷ்வரனை லைம் லைட்டுக்கு கொண்டு வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

கூட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: மக்களவை தேர்தலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் இண்டியா கூட்டணி என்ற வலுவான கூட்டணி உருவாகியுள்ளது. அடுத்த ஆட்சி இண்டியா கூட்டணியின் கூட்டாட்சி தான் அமையும். தூத்துக்குடி மக்களவை தொகுதியில், ஏழை, எளிய மக்களை நேசிக்க கூடிய, மழை, வெயில் எந்நேரமும் மக்களை பற்றி சிந்திக்க கூடிய கனிமொழி எம்பி தான் மீண்டும் வேட்பாளராக நிற்பார். அவரை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக சட்டப்பேரவை தொகுதி வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் ஒன்றிய அளவிலான குழுவை தேர்வு செய்ய வேண்டும். இந்த குழுவில் அனைவரையும் ஒருங்கிணைத்து பொருத்தமானவர்களை தேர்வு செய்து ஒன்றியக்குழுவை அமைக்க வேண்டும்.

மகன் அனிதா ஆர்.ஆனந்த மகேஷ்வரனை லைம் லைட்டுக்கு கொண்டு வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரங்களை மாவட்ட கழகத்தில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளியூரில் வசிப்பவர்கள், இறந்தவர்கள் விவரங்களை 10 நாட்களுக்குள் சேகரிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், கட்சி தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களை கட்சியில் இருந்து நீக்க மாவட்ட செயலாளர் என்ற முறையில் நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கட்சி தலைமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும். எந்தவித கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பணியாற்ற வேண்டும். வெற்றி ஒன்றே நமது குறிக்கோள். அது சாதாரண வெற்றியாக இருக்க கூடாது. எதிர்த்து நிற்பவர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ஆர்.சுதானந்தம், மாநில திமுக வர்த்தகரணி இணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்களான முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், மாடசாமி, செந்தூர்மணி, மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget