மேலும் அறிய

VO Chidambaram Pillai: கப்பலோட்டிய தமிழனின் வாழ்க்கையும் போராட்டமும் - வழக்கறிஞர் முதல் சுதந்திர போராட்ட வீரர் வரை

V O Chidambaram Pillai History: வ.உ.சிதம்பரனாரின் கனவை நிறைவேற்றும் வகையில் சுதந்திரத்துக்கு பிறகு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வ.உ.சிதம்பரம்பிள்ளை பெயர் தாங்கிய கப்பல் பயணம் 1949ல் தொடங்கப்பட்டது.

வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வெறியாட்டம் எங்கும் தங்கு தடையின்றி நடைபெற்ற காலம். கதர் சட்டையை கண்டால் அடி. கதர் குல்லாயைக் கொண்டால் அடி. வந்தேமாதரம் என்றால் உதை என்று ஆங்கியேர்களின் வெறியாட்டம் நடந்த காலம். அப்படிப்பட்ட காலத்தில் தமிழக மக்களிடம் மறைந்து இருந்த புரட்சி கனலை தட்டியெழுப்பி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்முனைக்கு அழைத்து சென்ற தமிழன் வ.உ.சிதம்பரனார். இவர் 1872-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.

VO Chidambaram Pillai: கப்பலோட்டிய தமிழனின் வாழ்க்கையும் போராட்டமும் - வழக்கறிஞர் முதல்  சுதந்திர போராட்ட வீரர் வரை

நன்கு கல்வியறிவு பெற்ற அவர் சட்டப்படிப்பு முடித்து சட்ட நிபுணராக தேர்ச்சி பெற்றார். 1900-ம் ஆண்டு வக்கீலாக பணியை தொடங்கினார். இந்தியாவில் முதல்முதலாக ஹார்வி மில்லில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கம் அமைத்து தொழிலாளர்களுக்காக போராடி அதில் வெற்றியும் கண்டார்.சுதேசியின் மீது சிந்தனையை செலுத்திய வ.உ.சி. பல்வேறு சுதேசி உணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெள்ளையர்களின் கொள்ளைகளை உணர்ந்தார். அதை ஒழித்துக் கட்ட தரும சங்க நெசவுச்சாலை, சுதேசிய நாவாய்ச் சங்கம், சுதேசிய பண்டகசாலைகளை ஆரம்பித்தார். அவர் மேடையிலேறி மக்களைத் திரட்டினார். அன்னிய ஆடைகளைக் கொளுத்தினார் அன்னியப் பொருள்களை கையால் கூட தொடுவதில்லை என்று உறுதியெடுத்தார்.

VO Chidambaram Pillai: கப்பலோட்டிய தமிழனின் வாழ்க்கையும் போராட்டமும் - வழக்கறிஞர் முதல்  சுதந்திர போராட்ட வீரர் வரை

ஆங்கிலேயர்களின் கொள்ளை லாபத்துக்கு உதவுவது கப்பல் வாணிபம் என்பதை உணர்ந்து அதன் அபிவிருத்தியை தடுத்து சமாதிகட்ட திட்டமிட்டார். பாண்டியர்கள், சோழர்கள் காலம் முதல் கடலாதிக்கம் பெற்றிருந்த தமிழர்கள், ஆங்கிலேயர்களின் கப்பல் வர்த்தகத்தால் தடைப்பட்டுவிட்டது என்று கருதினார். இதனால் 1906-ம் ஆண்டு தூத்துக்குடியில் சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கினார். இந்த கப்பல் கம்பெனியை தொடங்குவதற்காக வ.உ.சி. தூத்துக்குடி வாடித்தெருவில் வைத்து ஆலோசனை நடத்திய வ.உ.சி வாடி தெருவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வளைவு வடிவிலான ஆர்ச் முன்பாக அதற்கான பங்குபத்திரத்தில் கையெழுத்தும் இட்டார் என்கிறது வரலாற்று ஆவணங்கள். பின்னர் சுதேசி கப்பல் கம்பெனிக்கான பங்குகள் வெளியிடப்பட்டன. சுதேசி கப்பல் கம்பெனி நாடெங்கும் உள்ள வியாபாரிகளின் ஆதரவால் லாபகரமாக நடைபெற்றது. "எஸ். எஸ். காலியா, எஸ். எஸ். லாவோ" என்ற இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டன. 

VO Chidambaram Pillai: கப்பலோட்டிய தமிழனின் வாழ்க்கையும் போராட்டமும் - வழக்கறிஞர் முதல்  சுதந்திர போராட்ட வீரர் வரை

தூத்துக்குடியில் 80 சி என்ற கதவு இலக்கத்தில் கப்பல் கம்பெனி இயங்கி வந்தது. அதே நேரத்தில் வ.உ.சி. தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார் என தகவலும் உண்டு.இந்த கப்பல் கம்பெனிக்கு பல வழிகளிலும் ஆங்கிலேயர்கள் நெருக்கடி கொடுத்தனர். வ.உ.சி. பாலகங்காதர திலக்கின் பக்தர். 1909-ம் ஆண்டு நெல்லையில் தேசாபிமான சங்கம் அமைத்தார். மக்களிடையே சுதந்திரத்தைப்பற்றி இந்த சங்கம் பிரசாரம் செய்து வந்தது. ஜில்லா மாஜிஸ்திரேட் உத்தரவை மீறி, பிபின் சந்திரபால் விடுதலையை இந்த சங்கம் கொண்டாடியது.

VO Chidambaram Pillai: கப்பலோட்டிய தமிழனின் வாழ்க்கையும் போராட்டமும் - வழக்கறிஞர் முதல்  சுதந்திர போராட்ட வீரர் வரை

ஜில்லா கலெக்டர், சிதம்பரம் பிள்ளையை அழைத்து, ஜில்லாவை விட்டு உடனே வெளியேறிவிட வேண்டும், அரசியல் நடவடிக்கையில் கலந்து கொள்வதில்லையென்று உறுதியளிக்க வேண்டுமென்றும் கூறினார். இதற்கு சிதம்பரம்பிள்ளை மறுத்துவிட்டார். ராஜ துரோக குற்றமிழைத்ததாக இவர் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையும் அடைந்தார். அந்த சமயம் இந்தியா மந்திரியாயிருந்த லார்டு மூர்லி, இத்தண்டனையை அங்கீகரிக்கவில்லை. கடைசியாக ஆயுள் தண்டனை ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. வ.உ.சி சிறை சென்றதும், கப்பல் கம்பெனி நொடிந்து விட்டது. சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தொடர்ந்து சேவை செய்தார். 1936-ம் ஆண்டு தூத்துக்குடி 53 என்ற கதவிலக்கத்தில் உடல்நலக்குறைவு காரணமாக வ.உ.சிதம்பரானார் மரணம் அடைந்தாக தூத்துக்குடி நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

VO Chidambaram Pillai: கப்பலோட்டிய தமிழனின் வாழ்க்கையும் போராட்டமும் - வழக்கறிஞர் முதல்  சுதந்திர போராட்ட வீரர் வரை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget