மேலும் அறிய

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி ஏற்பாடுகள்! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.

திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசியதாவது,  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். திருச்செந்தூர் நகர பகுதியில் குப்பைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி ஏற்பாடுகள்! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கோயில் வளாகங்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களிடம் பேசி மாடுகளை வெளியில் விடாமல் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.திருச்செந்தூருக்கு நெல்லையில் இருந்து 60 பேருந்துகள், தூத்துக்குடியில் இருந்து 40 பேருந்துகள், மதுரையில் இருந்து 60 பேருந்துகள், ராஜபாளையத்தில் இருந்து 15 பேருந்துகள் உள்பட சுமார் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகள் திருச்செந்தூர் ஐ.டி.ஐ வளாகத்தில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இதே போன்று நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரியில் இருந்து வரும் பேருந்துகளுக்கும் தனியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிரடி ஏற்பாடுகள்! ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கடலில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்காக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறை சார்பில் 5 படகுகளில் போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். செல்போன்கள் சீராக இயங்குவதற்காக 6 செல்போன் கோபுரங்கள் உள்ளன. மேலும் 2 நகரும் செல்போன் கோபுரங்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்படும். விழாவின் போது பக்தர்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்படும். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்படும். பக்தர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக காவல் துறையினர் உதவியுடன், அந்த பக்தரை அங்கிருந்து வெளியேற்றி கொண்டு வரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தீயணைப்புத் துறை சார்பில் கோயில் வளாகத்தில் 7 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அதே போன்று 40 கமாண்டோ வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள். பக்தர்கள் வரிசை முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக கோயில் பாதுகாப்புப் பணியில் 144 தனியார் காவலர்கள் உள்ளனர். இது தவிர முதல் 3 நாட்கள் கூடுதலாக 50 பேரும், அடுத்த 3 நாட்கள் கூடுதலாக 100 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை சார்பில் சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவுக்கு முன்பு அனைத்து தெரு விளக்குகளும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

தலைப்பு செய்திகள்

Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget