மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. தூத்துக்குடி ரயில் பாதை மறுசீரமைப்பு: ரயில்கள் மாற்றம் !

டிசம்பர் 21 முதல் 23 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய முத்து நகர் ரயில் (12694) வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும்.

தூத்துக்குடி ரயில் நிலைய ரயில் பாதை மறு சீரமைப்பு பணிகள் ரயில் போக்குவரத்தில் மாற்றம்.

ரயில் பாதைகளின் மறு சீரமைப்பு பணிகள்
 
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை போக்குவரத்தை நடைமுறைப்படுத்த ரயில் நிலைய ரயில் பாதைகளின் மறு சீரமைப்பு பணிகள் டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெற இருக்கிறது. இந்த மறுசீரமைப்பில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புதிய நவீன பாதுகாப்பான சிக்னல் முறை நிர்மாணிக்கப்படும். தற்போது 532 மீட்டர் நீளமுள்ள முதல் நடைமேடை 595 மீட்டர்  நீட்டிக்கப்படவுள்ளது. மேலும் நடைமேடையில்லாமல் ரயில்கள் நிறுத்தும் ரயில் பாதைகள் மற்றும் ரயில் பெட்டி பராமரிப்பு ரயில் பாதைகள் ஆகியவையும் நீட்டிக்கப்பட உள்ளன. ரயில் இன்ஜின்கள் ரயிலின் முன்புறத்தில் இருந்து பின்புறத்திற்கு எளிதாக சென்று வர தனி ரயில் பாதைகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரு பெட்டி கொண்ட மின்மய பராமரிப்பு ரயில் நிறுத்த தனி ரயில் பாதையுடன் கூடிய சிறு கூடாரம் மற்றும் கடவுப்பாதை மேம்பாடு ஆகியவையும் அடங்கும். 
 
தனி ரயில் பாதை
 
இதுபோன்ற ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் மீளவிட்டான் ரயில் நிலையத்திலும் நடைபெற இருக்கிறது. கூடுதலாக ரயில் பாதை பராமரிப்பு இயந்திர ரயில் நிறுத்த தனி ரயில் பாதையும், பயணிகள் ரயில் பாதையை பயன்படுத்துவதை தவிர்க்க சரக்கு ரயில் பெட்டிகளை ஒருங்கிணைக்க புதிய 750 மீட்டர் நீள தனி ரயில் பாதையும் அமைக்கப்பட உள்ளன. சரக்கு ரயில் பெட்டிகளை பராமரிக்க தனி ரயில் பாதையும் சரக்குகளை கையாளும் பகுதியில் காங்கிரீட் தரைதளம் ஆகியவையும் அமைக்கப்படும்.
 
பாலக்காட்டில் இருந்த புறப்பட வேண்டிய பாலருவி ரயில்
 
இந்த முக்கிய பணிகளுக்காக இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி ரயில்கள் (56726/56723) டிசம்பர் 17 முதல் 23 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில்கள் (56722/56721) டிசம்பர் 17, 18, 19, 20, 22, 23 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இரவு நேர வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி ரயில்கள் (56724/56725) டிசம்பர் 17 முதல் 22 வரை முழுமையாக ரத்து செய்யப்படும். டிசம்பர் 14 முதல் ஜனவரி 27 வரை பாலக்காட்டிலிருந்து புறப்பட வேண்டிய பாலருவி ரயில் (16792) திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும்.
 
வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும்.
 
டிசம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட வேண்டிய பாலருவி ரயில் (16791) திருநெல்வேலி இருந்து இயக்கப்படும். டிசம்பர் 21 முதல் 23 வரை தூத்துக்குடி இருந்து புறப்பட வேண்டிய மைசூர் ரயில் (16235) வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும். டிசம்பர் 20 முதல் 22 வரை மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி ரயில் (16236) வாஞ்சி மணியாச்சி மட்டும் வரை இயக்கப்படும். டிசம்பர் 19 அன்று குஜராத் ஓஹாவில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி ரயில் (19568) கோவில்பட்டி வரை மட்டும் இயக்கப்படும். டிசம்பர் 21 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ஓஹா ரயில் (19567) கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும்.  டிசம்பர் 20 முதல் 22 வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய முத்து நகர் ரயில் (12693) வாஞ்சி மணியாச்சி வரை மட்டும் இயக்கப்படும். டிசம்பர் 21 முதல் 23 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய முத்து நகர் ரயில் (12694) வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும்.
 
தலைப்பு செய்திகள்

CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
Embed widget