மேலும் அறிய

Chennai-Tuticorin Vande Bharat: முத்து நகர் மக்களே தித்திப்பான நியூஸ்! விரைவில் வந்தே பாரத் சேவை.. எப்போ தொடங்குகிறது?

Chennai to Thoothukudi Vande Bharat Train: தூத்துக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.

துறைமுக நகரமான தூத்துக்குடிக்கு  புதிய 'வந்தே பாரத்' (Vande Bharat Express) அதிவேக ரயிலை இயக்க வேண்டும் எனத் தெற்கு ரயில்வே மற்றும் ரயில்வே வாரியத்திடம்  கோரிக்கை மற்றும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நகரம்: 

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான தூத்துக்குடிக்கு தினமும் நூற்றுக்கணக்கான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். உப்பு, முத்துக்குளித்தல், மீன் ஏற்றுமதி உள்ளிட்ட முக்கிய வணிக ஏற்றுமதிகள் இங்கு தினம் தோறும் நடைப்பெறுகிறது. இதுமட்டுமின்றி திருச்செந்தூர் முருகன் கோவில், மணப்பாடு, திருவைகுண்டம் உள்ளிட்ட முக்கிய வழிப்பாட்டு தலங்கள் தூத்துக்குடியை சுற்றி உள்ளது. 

இதற்காக சென்னையில் இருந்து தினமும் 20-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், விமானங்கள் என தூத்துக்குடிக்கு போக்குவரத்து சேவை வழங்குகின்றன. 

ஒரே ஒரு ரயில்: 

சாலை மற்றும் ஆகாய மார்க்கமாக தூத்துக்குடிக்கு நிறைய போக்குவரத்து சேவை இருந்தாலும், சென்னையில் இருந்து தூத்துக்குடி ஒரே ஒரு ரயில் சேவை தான் உள்ளது. தலைநகரான சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தற்போது முத்து நகர் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு பெரிய நகரத்திற்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே உள்ளதால் கூடுதலாக ஒரு ரயில் வேண்டுமென தூத்துக்குடியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

வந்தே பாரத் ரயில்:

தூத்துக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 'முத்துநகர் எக்ஸ்பிரஸ்' மட்டுமே பிரதான ரயிலாக உள்ளது. தூத்துக்குடி ஒரு முக்கியமான தொழில் நகரமாகவும், திருச்செந்தூர் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள் நிறைந்த மாவட்டமாகவும் இருப்பதால், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்து வந்தது.

9 மணி நேரத்திற்குள் சென்றடையலாம்:

சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மதுரை, வாஞ்சி மணியாச்சி வழியாகத் தூத்துக்குடிக்கு இந்த வந்தே பாரத் ரயில் சேவையானது  இயக்கப்பட்டால், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 8 முதல் 9 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், பயோ டாய்லெட் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற நவீன வசதிகள் இந்த ரயிலில் இடம்பெறும்.

Frequently Asked Questions

தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை ஏன் எழுந்துள்ளது?

தூத்துக்குடி ஒரு முக்கிய தொழில் மற்றும் ஆன்மீகத் தலமாக இருப்பதால், தற்போதுள்ள ஒரே ஒரு ரயில் சேவை போதாது. எனவே, கூடுதலாக ஒரு ரயில் தேவைப்படுகிறது.

புதிய வந்தே பாரத் ரயிலில் என்னென்ன நவீன வசதிகள் இருக்கும்?

இந்த ரயிலில் ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், பயோ டாய்லெட் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற நவீன வசதிகள் இடம்பெறும்.

வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டால், சென்னையில் இருந்து தூத்துக்குடியை எவ்வளவு நேரத்தில் சென்றடையலாம்?

இந்த ரயில் சேவை மூலம், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 8 முதல் 9 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?

தற்போது, ​​சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 'முத்துநகர் எக்ஸ்பிரஸ்' என்ற ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget