மேலும் அறிய

சென்னை-விழுப்புரம் வெறும் 1 மணி நேரத்தில்! ₹75,000 கோடி RRTS ரயில் திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

Chennai to Villupuram RRTS Train: "சென்னை - விழுப்புரம் இடையே ஒரு மணி நேரத்தில் பயணம், 'RRTS' ரயில் இத்திட்டத்தின், மொத்த செலவு சுமார் ₹75,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது."

RRTS Train Chennai to Villupuram: சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருவதால், பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு எழுந்துள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு பொது போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையையும், தென்மாவட்டங்களின் நுழைவாயிலான செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளை, இணைக்கும் வகையில் அதிவேக ரயில் திட்டமான "மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு" (RRTS) குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின்படி, ஆலந்தூர் முதல் விழுப்புரம் வரையிலான வழித்தடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை-விழுப்புரம் வெறும் 1 மணி நேரத்தில்! ₹75,000 கோடி RRTS ரயில் திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

வழித்தட விவரங்கள்: எங்கு தொடங்கி எங்கு முடிகிறது?

இந்த அதிவேக ரயில் பாதை சென்னையின் ஆலந்தூரில் தொடங்கி, பல்லாவரம், சென்னை சர்வதேச விமான நிலையம், தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வழியாகச் செல்கிறது. அங்கிருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம் வழியாகச் சென்று விழுப்புரத்தில் நிறைவடைகிறது.

மேலும், இந்தத் திட்டத்தில் ஒரு சிறப்பம்சமாக, விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி மற்றும் கடலூர் வரை சுமார் 64 கி.மீ தூரத்திற்கு ஒரு கிளைப் பாதையும் (Spur line) அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த ரயில் பிணையத்தின் நீளம் 146 கி.மீ ஆக இருக்கும்.

சென்னையின் மக்கள் நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, ஆலந்தூர் முதல் கிளாம்பாக்கம் வரை தண்டவாளங்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் (Underground) அமைக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்திற்குப் பிறகு, தண்டவாளங்கள் ஜி.எஸ்.டி சாலையின் நடுவே அல்லது ஓரங்களில் மேம்பாலங்களாக (Elevated) அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை-விழுப்புரம் வெறும் 1 மணி நேரத்தில்! ₹75,000 கோடி RRTS ரயில் திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

மணிக்கு 160 கி.மீ வேகம்

இந்த ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. எதிர்காலத்தில் தேவைப்பட்டால், இந்த வேகத்தை 300 கி.மீ வரை உயர்த்தும் வசதிகளும் தண்டவாள அமைப்பில் இருக்கும். டெல்லி-மீரட் இடையே உள்ள நவீன ரயில் சேவையைப் போலவே, இதுவும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட உள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன ? KEY Features of RRTS Train 

இந்தத் திட்டம் வெறும் பயணத்திற்கானதாக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் தெற்குப் பகுதியின் பொருளாதார முதுகெலும்பாக அமையும். இரவு நேரங்களில் இந்த ரயில்களை சரக்கு போக்குவரத்திற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் சென்னையில் தங்குவதைத் தவிர்த்து, திண்டிவனம் அல்லது விழுப்புரம் போன்ற பகுதிகளில் வசித்துக் கொண்டே சென்னைக்கு வேலைக்கு வந்து செல்ல இது வழிவகுக்கும். 

இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக சுமார் ₹75,000 கோடி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2032-ஆம் ஆண்டிற்குள் இந்த ரயிலில் ஒரு நாளைக்கு சுமார் 2.18 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, சென்னை-விழுப்புரம் இடையேயான ஜி.எஸ்.டி சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை-விழுப்புரம் வெறும் 1 மணி நேரத்தில்! ₹75,000 கோடி RRTS ரயில் திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

4 மணிநேர பயணம் 1 மணி நேரத்தில்...

தற்போது சென்னையிலிருந்து விழுப்புரம் செல்வதற்கு பேருந்து அல்லது ரயிலில் சுமார் 4 மணிநேரம் வரை ஆகிறது. ஆனால், இந்த புதிய RRTS ரயில் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, பயணிகள் வெறும் 1 மணி நேரத்தில் விழுப்புரத்தை அடைய முடியும். இது தினமும் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் தொழில் ரீதியாக சென்னை சென்று வருபவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget