மேலும் அறிய

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

’’தூத்துக்குடியில் பழங்குடியினர் பூங்கா, ஐந்திணை பூங்கா, கோளரங்கத்துடன் கூடிய போக்குவரத்து பூங்கா ஆகியவை கட்டப்பட்டுள்ளது’’

இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 73.32 லட்சம் செலவில் பழங்குடியினர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  1000 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம், ஸ்மார்ட் சாலைகள், அறிவியல் பூங்காக்கள் போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி முன்பு பெரிய அளவிலான அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. 6.28 கோடி மதிப்பீட்டில் இந்த வளாகத்தில் 4 வகையான பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்கள் குறிப்பாக மாணவ, மாணவியர் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் வகையில் 'போக்குவரத்து பூங்கா' ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் போக்குவரத்து சிக்னல்கள், சாலை விதிகள் குறித்த அம்சங்கள் இடம் பெறுவதுடன்  கோளரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

மேலும், தமிழகத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றை குறிக்கும் வகையில் 'ஐந்திணை பூங்கா' ஒன்று அமைக்கப்படுகிறது. இதனை தவிர நான்காவதாக இந்தியாவின் பழங்குடியினர் பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது. இந்த பூங்காவை அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனம் அமைத்துக் கொடுக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள தோடர், இருளர், பனியர் உள்ளிட்ட 12 முக்கியமான பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, தொழில், குடியிருப்பு போன்றவற்றை சித்தரித்து இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

இதற்காக தத்ரூபமான சிலைகள், குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவின் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை இன்றைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பூங்காக்களின் பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள பூங்காங்களை விரைவில் முதல்வர் திறக்க உள்ளதாக என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தயாரான தூத்துக்குடி பழங்குடியினர் பூங்கா - விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகிறது

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் பரப்பளவில் .28.31 கோடியில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவை ஒருங்கிணைந்த 'ஸ்டெம்' பூங்காவாக (STEM: Science, Technology, Engineering and Maths) இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.இந்த பூங்காவில் மினி திரையரங்கம், அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் விண்வெளி மண்டலம், பரிமாண மாதிரிகள், உட்புறக் கண்காட்சிகள், ஒரு கோளத்தின் அறிவியல், மெய்நிகர் கண்காட்சிக் கூடம், கண்டுபிடிப்பு மையம் போன்றவை அமைக்கப்படுகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget