மேலும் அறிய

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம்...! - மக்களை தூண்டிவிடுவதாக புகார்

ஸ்டெர்லைட் நிறுவனம்  தூத்துக்குடி நகரில் உள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருக்கும் படி கூறி பணம், அரிசி உள்ளிட்டவைகளை வழங்கி வருவதாக புகார்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைச் சுற்றியுள்ள மடத்தூா், மீளவிட்டான், பண்டாரம்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, சில்லாநத்தம், நடுவக்குறிச்சி, சங்கரபேரி,தெற்கு வீரபாண்டியபுரம், குமாரரெட்டியாபுரம் ஆகிய பல்வேறு கிராம மக்கள், மாவட்ட கூடுதல் ஆட்சியா் சரவணனிடம் அளித்த மனுவில், நான்கு ஆண்டுகளாக மூடிய நிலையில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதேபோல, தூத்துக்குடி சகாயபுரம், மட்டக்கடை, லூா்தம்மாள்புரம், மாதவன்நாயா் காலனி, திரேஸ்புரம், மினி சகாயபுரம், மாதாகோவில் தெரு, லயன்ஸ்டோன், குருசாமி புரம், குருஸ் புரம், தெற்கு கடற்கரை சாலை தெரு,, கணேசபுரம் ராமா் விலை தேவேந்திர குல வேளாளா் சங்கத்தை சோ்ந்தவா்கள் என அனைத்து தரப்பினரும் ஸ்டொ்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனியே மனு அளித்தனா்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம்...! - மக்களை தூண்டிவிடுவதாக புகார்

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அரசாணை பிறப்பித்து இழுத்து மூடப்பட்டது. இந்நிலையில் சமீபகாலமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களும் கிராம மக்களும் மனு அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாமிநத்தம் தெற்கு சிலுக்கன்பட்டி, பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாத்திமாநகர் பகுதி பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம்...! - மக்களை தூண்டிவிடுவதாக புகார்

மக்கள் போராட்டத்தையடுத்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த திடீர் போராட்டம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடையே பேசுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இழுத்து மூடிய இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் இறங்கி உள்ளது. கல்வி உதவி, வேலை உதவி, உணவு, வீடு கட்டுமான‌ உதவி என பல்வேறு பல பெயர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. எனவே ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் சாலை  மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம்...! - மக்களை தூண்டிவிடுவதாக புகார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்  தூத்துக்குடி நகரில் உள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருக்கும் படி கூறி பணம், அரிசி உள்ளிட்டவைகளை வழங்கி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த கோரியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும் நேற்றிரவு பாத்திமாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் மக்கள் போராட்டம்...! - மக்களை தூண்டிவிடுவதாக புகார்

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் மனுவினை அளித்தனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வருவதாகவும் இதனால் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு துணைபோகும் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை பள்ளி மாணவன் அட்டகாசம்: ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை தாக்கிய வீடியோவால் பரபரப்பு!
மதுரை பள்ளி மாணவன் அட்டகாசம்: ஆசிரியர்கள் முன்பே சக மாணவனை தாக்கிய வீடியோவால் பரபரப்பு!
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
அதிர்ச்சி! மீன்பிடி திருவிழாவில் நுழைந்த ‘ராட்சச’ டேங்க் கிளீனர் மீன்கள்! - கரையிலேயே கொட்டிச் சென்ற கிராம மக்கள்!
அதிர்ச்சி! மீன்பிடி திருவிழாவில் நுழைந்த ‘ராட்சச’ டேங்க் கிளீனர் மீன்கள்! - கரையிலேயே கொட்டிச் சென்ற கிராம மக்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget