மேலும் அறிய

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ். முன்னதாக மீனவர்கள் பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி மீனவர்களுக்கு வழக்கம்போல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் மீன்பிடி சிறுசேமிப்பு நிவாரண தொகை, தடைக்காலம் மற்றும் மழைக்கால நிவாரணம் தொகை நடப்பாண்டுக்கு  சுமார் 1000 மீனவர்களுக்கு இதுநாள்வரை நிவாரணம் வழங்காததை கண்டித்தும் உடன் வழங்க கோரியும் முத்துப்பேட்டை, துரைக்காடு, ஜாம்புவானோடை, செங்காங்காடு, தொண்டியக்காடு, ஆலங்காடு, கீழவாடியக்காடு, வடக்கு வெள்ளாதிக்காடு, கற்பகநாதர்குளம், முனங்காடு, கீழவாடியக்காடு, கரையங்காடு ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்கள் சங்க சார்பில்  வரும் 18ந்தேதி முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு திருவள்ளுவர் சிலை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்
 
இதனையடுத்து  முத்துப்பேட்டை வட்டாட்சியர் மகேஷ் குமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டம் குறித்து சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் தரப்பில் மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, நாகப்பட்டினம் மீன்வள உதவி இயக்குநர் ஜெயராஜ், முத்துப்பேட்டை உதவி இயக்குநர் மோகன் குமார், காவல் ஆய்வாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரும் அதேபோல் போராட்ட குழு சார்பில் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் அதிகாரிகள் தரப்பில் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மீனவர்கள் பிரதம மந்திரி திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு அதன் காரணமாக நீக்கம் செய்யப்பட்ட 532‌ நபர்களுக்கு 01.04.2023 முதல் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை, தேசிய மீனவர் நிவாரண தொகை மற்றும் மகளிர் சேமிப்பு நிவாரண தொகை வழங்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி தலைமை அதிகாரிகள் எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்ததின் அடிப்படையில் 18ந்தேதி அன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது என போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

முத்துப்பேட்டை வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தின் மூலம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்
 
இந்தநிலையில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலில் முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பயணிகள் விடுதிக்கு வரும்படி மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து சுமார் 300மீனவர்களும் அங்கு காலை 11மணிக்கு திரண்டு வந்திருந்தனர். ஆனால் 12.30 மணிவரை யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் தொடர்புக்கொண்ட போது அதிகாரிகள் தரப்பில் சில நிமிடத்தில் எங்க வரணும் என்று சொல்கிறோம் அதுவரை அனைவரும் ரயில்வே நிலையம் வரும்படி கூறினார். இதனையடுத்து அனைத்து மீனவர்களும் அங்கு வந்தனர் அங்கு வந்தும் தகவல் ஏதும் கிடைக்காததால் சாலை மறியல் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். பின்னர் சந்தை அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு வரும்படி அதிகாரிகள் அழைத்தனர் இதனையடுத்து அணைத்து மீனவர்களும் பேரணியாக அங்கிருந்து புறப்பட்டு திருமண மண்டபம் வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget