மேலும் அறிய

உங்கள் குழந்தையும் இன்ஜினியர் ஆகலாம்... சுமங்கலா ஸ்டீல் கல்வி உதவித் தொகை வழங்கல்

1985ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுமங்கலா ஸ்டீல், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டுமானத் துறைக்கு தரம், நிலைத்தன்மை மற்றும் சிறப்புடன் சேவை செய்து வருகிறது.

தஞ்சாவூர்: பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு, சுமங்கலா ஸ்டீல் கல்வி உதவித்தொகைகளை வழங்கியது.

சுமங்கலா ஸ்டீலின் “உங்கள் குழந்தையும் இன்ஜினியர் ஆகலாம்” திட்டம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று முன்னேறி வருகிறது. அதன் மூன்றாவது பதிப்பில் 19 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அவர்களின் 3/4 ஆண்டுகளுக்கான முழு கல்விக்கட்டணத்தையும் சுமங்கலா ஏற்று, படிப்பிற்கு உதவியாக லேப்டாப்களையும் வழங்குகிறது. மேலும், முதல் மற்றும் இரண்டாம் பதிப்பில் தேர்வான மாணவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். 

உங்கள் குழந்தையும் இன்ஜினியர் ஆகலாம்... சுமங்கலா ஸ்டீல் கல்வி உதவித் தொகை வழங்கல்

இவ்வருடம் மொத்தமாக 53 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். மொத்த கல்வி உதவித்தொகை ரூ. 212 லட்சம் ஆகும். 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுமங்கலா சமூகப் பொறுப்புணர்வு நிதிகல்வி உதவித்திட்டமான “உங்கள் குழந்தையும் இன்ஜினியர் ஆகலாம்”என்பது, தங்களது சமூகத்தின் குழந்தைகள் இன்ஜினியராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற உதவுவதற்கான சுமங்கலா ஸ்டீல் நிறுவனத்தின்அர்ப்பணிப்பு உணர்வுள்ள முயற்சியாகும்.

1985ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுமங்கலா ஸ்டீல், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டுமானத் துறைக்கு தரம், நிலைத்தன்மை மற்றும் சிறப்புடன் சேவை செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக நம்பிக்கைக்குரிய மற்றும் அனுபவமிக்க இரும்புக்கம்பி உற்பத்தியாளராக விளங்கி வருகிறது.

கட்டுமானத்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளரும் மற்றும், ஸ்டீல் டீலர் ஷிப் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பல ஆண்டுகளாகத் தகுதியான பொறியாளர்களின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.  அவர்கள் தங்கள் குழந்தைகளும் தாங்கள் பணியாற்றிய அந்த பொறியாளர்களைப் போல உயர வேண்டும் என்று இயல்பாகவே விரும்புகின்றனர். இரும்புக்கம்பித் துறையில் சிறந்த புரிதலைக் கொண்ட சுமங்கலா ஸ்டீல், தொடர்ந்து உயர்தர TMT கம்பிகளை வழங்கி, கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றியுள்ளது. அதற்கு பதிலாக, அந்தத் தொழிலாளர்கள் சுமங்கலாவுக்கு தங்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வழங்கியுள்ளனர். 

இதுதொடர்பாக, சுமங்கலா ஸ்டீலின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேந்திரன்சபாநாயகம் கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக, கட்டுமானத் தொழிலாளர்களும், டீலர்களும் எங்கள் குடும்பமாக இருந்து வருகின்றனர். சுமங்கலா கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம், அவர்களின் வாழ்க்கையில் இன்னும் பெரிய பங்காற்ற விரும்புகிறோம். அவர்களின் குழந்தைகள் இன்ஜினியர்களாகும் கனவை நிறைவேற்ற உதவுவது எங்கள் இதயபூர்வமான முயற்சியாகும்”எனவும் தெரிவித்தார். 

கல்வி உதவித்திட்டத்தின் முக்கியஅம்சங்கள்

கட்டுமானத்தொழிலாளர்கள் மற்றும் ஸ்டீல்டீலர்ஷிப் ஊழியர்களின் குழந்தைகள் இன்ஜினியராக உருவாக ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள இன்ஜினியரிங் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்குப் பொருந்தும். பிளஸ்டூ தேர்வில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

அடிப்படை தகுதியைப் பூர்த்தி செய்தவர்கள் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை கல்விச் செலவுகளை சுமங்கலா ஸ்டீல் ஏற்கும். இன்ஜினியரிங் படிப்பைத் தொடங்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். இந்த உதவித்தொகை, மாணவர்களின்மதிப்பெண்கள், ஒழுக்கம் மற்றும் வருகை போன்ற அடிப்படை தரங்களைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் (3/4 ஆண்டுகள் ) தொடர்ந்து வழங்கப்படும். இந்த கல்வி உதவித்திட்டத்தை, தொடர்ந்து பலஆண்டுகளாக செயல்படுத்தி, கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்டீல் டீலர்ஷிப் ஊழியர்களின் குழந்தைகளை ஆதரிப்பதே சுமங்கலாவின் நோக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சுமங்கலா ஸ்டீலின் தலைவர் ராஜேந்திரன் சபாநாயகம் மேலும் கூறுகையில் “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நீண்டகாலமாக இயங்கி வரும் கட்டுமான எஃகு உற்பத்தியாளர் சுமங்கலா. தமிழ்நாட்டின் கட்டிடங்களின் முதுகெலும்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கும் ஆதரவாக இருப்பதே எங்கள் நோக்கம். தற்போது தேர்வு செய்யப்பட்ட 19 மாணவர்களுக்கும், அவர்களின் பெருமைமிகு பெற்றோருக்கும் இந்த இன்ஜினியரிங் கல்வி உதவித் தொகைகளை வழங்குவது எங்களுக்குப் பெருமையான நாள். அவர்களின் படிப்பு முழுவதும் நாங்கள் உறுதியாக அவர்களுடன் இருப்போம் என்று தெரிவித்தார். 

சுமங்கலாவின்இந்தமுயற்சியை பிரபல நடிகரும், கார்ப்பரேட் பயிற்சியாளருமான மோகன்ராமன் பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “இது மிகவும் சிந்தனையுடனும், சுமங்கலா ஸ்டீலின் மிகப்பெரிய அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் செயலாகும். தமிழ்நாட்டின் கட்டுமானத் தொழிலாளர்கள் இந்த அரிய வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்,”எனதெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முன்னாள் பொறியியல் தலைமை அதிகாரியும் மற்றும் பல முக்கிய கட்டிட வடிவமைப்புகளையும் கட்டுமானங்களையும் மேற்பார்வை செய்தவருமான கே.பி. சத்தியமூர்த்தி இந்தத் திட்டம் பொருளாதார வசதி இல்லாத குடும்பங்களில் இருந்து புதிய இன்ஜினியர்கள் உருவாக உதவும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது “எல்லோருக்கும்எல்லாம்” என்ற தத்துவத்தை நனவாக்கும் முயற்சி எனவும் கூறினார். 

சுமங்கலாவின் தலைவர் அஷ்வின் சபாநாயகம் கூறுகையில்: “நாம் ‘சுமங்கலா, தமிழ்நாட்டின் உள்சக்தி’ என்று சொல்லுவதோடு மட்டுமல்லாமல், எங்கள் இரும்புக் கம்பியிலும் எங்கள் செயல்களிலும் அதை நிரூபிக்க, தொடர்ந்து முயற்சி செய்வோம்”எனகூறினார்.

தலைப்பு செய்திகள்

அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget