மேலும் அறிய

சீர்காழி: ஆபத்தை உணராமல் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் ஆட்டம் போடும் இளைஞர்கள்..!

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளித்து கும்மாளம் போட்டு வருகின்றனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வழியாக பழையாறு கடலில் சென்று சேரும். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அருகே கொள்ளிடம் கரையோர கிராமங்களில் தண்ணீர் உப்புகுந்துள்ளது. 

சீர்காழி: ஆபத்தை உணராமல் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் ஆட்டம் போடும் இளைஞர்கள்..!

சீர்காழி தாலுகாவில் அளக்குடி, நாதல்படுகை, முதலைமேடு, வெள்ளமணல் உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் கரைக்கு உட்புறம் உள்ள திட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.  மேலும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மேடான பகுதிகளுக்கு தங்க அறிவுறுத்தி இருந்தனர். 

சீர்காழி: ஆபத்தை உணராமல் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் ஆட்டம் போடும் இளைஞர்கள்..!

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு கரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றுப் படுகை கிராமங்களான வெள்ளை மணல், நாதல்படுகை, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விவசாய விலை நிலங்களில்  தண்ணீர் உட்புகுந்துள்ளது. சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட வெண்டை, கத்திரிக்காய், சோளம் முல்லை பூ உள்ளிட்ட பயிர்களை முற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

சீர்காழி: ஆபத்தை உணராமல் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் ஆட்டம் போடும் இளைஞர்கள்..!

இந்த நிலையில், கொள்ளிடத்தை அடுத்த நாதல் படுகை கிராமம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனை அடுத்து அப்போது மக்களே படகுகள் மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் அப்பகுதி இளைஞர்கள்  ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் குளித்து விளையாடி ஆட்டம் போட்டு வருகின்றனர்.

Vegetables Price List: மாங்காய் விலை அதிகம்.. எக்கச்சக்க விலையில் எலுமிச்சை.. இன்றைய காய்கறி விலை நிலவரம்!

இப்பகுதியில் காவல்துறையினர் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலை வருகிறது. விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் புதிய காவலர்களைப் பகுதியில் பணியில் அமர்த்தி விபரீதம் புரியாமல் தண்ணீரில் இறங்கும் நபர்களை எச்சரிக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget