மேலும் அறிய

மயிலாடுதுறை: போலீஸ் மீது ஐஜியிடம் புகார் அளித்த பெண்கள்! நடந்தது என்ன?

வீட்டை கொளுத்தியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசார் மீது ஐஜியிடம் நேரடியாக புகார் அளித்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மத்திய மண்டல காவல் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் சட்ட ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு சில காவல் நிலையங்களில் ஐஜி பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செங்கமேடு கிராமத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார். அதனையடுத்து சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் கொரோனா தொற்றால் தாய் மற்றும் தந்தையை இழந்து வாடும் இரண்டு குழந்தைகளை வீட்டிற்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறி, வீட்டிற்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கி, இரண்டு குழந்தைகளின் படிப்பை குறித்து விசாரித்தவர், எந்த நேரத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் தன்னிடம் கேட்கலாம் எனவும் தெரிவித்து சென்றார்.

மயிலாடுதுறை: போலீஸ் மீது ஐஜியிடம் புகார் அளித்த பெண்கள்! நடந்தது என்ன?

இதனிடையே சொத்து பிரச்னை காரணமாக கூரைவீட்டைக் கொளுத்தியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஆய்வுக்காக வந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேரடியாக புகார் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை: போலீஸ் மீது ஐஜியிடம் புகார் அளித்த பெண்கள்! நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் கிளியனூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரஷியாபானு. இவரது தாயார் கடந்த 2013 ஆம் ஆண்டு அவருடை இரண்டு கூரை வீடுகள் உள்ள சொத்தினை செட்டில்மென்ட் பத்திரம் மூலம் ரஷியாபானுவுக்கு எழுதிவைத்துள்ளார். இந்த சொத்துக்கு அவரது சகோதரர் முகமதுஅலி, சகோதரி மகள் பாப்பாகனி ஆகியோரும் உரிமை கோரி வந்துள்ளனர். மேலும், அந்த நிலத்தை ஆக்ரமிக்கும் நோக்கத்தோடு, ரஷியாபானுவின் வீட்டு குடிநீர் இணைப்பையும் துண்டித்துள்ளனர். 

மயிலாடுதுறை: போலீஸ் மீது ஐஜியிடம் புகார் அளித்த பெண்கள்! நடந்தது என்ன?

இதுகுறித்து, ஊராட்சியில் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த முகமதுஅலி, பாப்பாகனி ஆகியோர் தாக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து, பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி ரஷியாபானுவின் கூரைவீடு தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்தும் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும்,  பெரம்பூர் காவல் நிலையத்தில்  எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தார். சொத்து பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவரிடமே நேரடியாக புகார் தெரிவிக்கப்பட்டதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்த காவல் துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget