மேலும் அறிய
Advertisement
’’அதிமுக அரசு சிறைக்கு அனுப்பிய விவசாயிகளால் கிடைத்த வெற்றி’’- பூண்டி கலைவாணன் பேட்டி
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஏராளமான திமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த ஒரு வருட காலமாக தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வேளாண் சட்ட மசோதா குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் விவசாய சங்கங்கள் தங்களுக்கு இச்சட்டம் உடன்பாடு இல்லை எனவும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் களத்தில் விவசாய பணி மேற்கொண்டு வருகின்ற விவசாயிகள் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது.
இந்த சட்டத்தால் நெல்லை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்காக தங்களுக்குள் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு தனியார் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட குறைந்த விலைக்கு எடுக்கக் கூடிய ஒரு நிலை உருவாகும். விவசாயிகளுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பயன் தரும் தனியார் வியாபாரிகள் மண்டி மூலமாக மொத்தமாக கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை மேலும் தனியார் வியாபாரிகள் அவர்கள் கேட்கும் நிலை மட்டும் தான் நாம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நிலையில் மூன்று பேரும் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்சியினர் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஏராளமான திமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூண்டி கலைவாணன் தமிழ்நாடு முதலமைச்சர் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர், அதுமட்டுமின்றி இந்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது ஏராளமான வழக்குகள் தொடுத்து அவர்களை சிறைக்கு அனுப்பியவர்கள் அதிமுகவினர் இன்று சிறைக்கு சென்ற விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக இந்த அறிவிப்பை உணரமுடிகிறது என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion