மேலும் அறிய

மயிலாடுதுறை : ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பட்டம் ஏன்? கேள்வி எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். மணி நூற்றாண்டு விழாவில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் சங்கம் சார்பாக கே.பி.எஸ். மணி நூற்றாண்டு விழா நடைபெற்றது. முன்னதாக சிலம்பாட்ட குழுவினர் சார்பில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித், பொதுச்செயலாளர் விடுதலை சிறுத்தை கட்சி சிந்தனை செல்வன் முன் சிலம்பம்  வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சமூக போராளி கே.பி.எஸ். மணி குறித்து புத்தகம் மற்றும் போராளித்தலைவன் கே.பி.எஸ்.மணி என்ற பாடல் வெளியிடப்பட்டது. 


மயிலாடுதுறை : ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பட்டம் ஏன்? கேள்வி எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், ”தனித் தொகுதியில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தனித்தொகுதிக்கு தேவையான எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை, திமுகவை சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தனித்தொகுதி என்ற அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி, பின்னர் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் பதவியை பெற்ற பின்னர், நாங்கள் ஒரு சாதியினருக்கு மட்டும் நாங்கள் அமைச்சர் இல்ல, எங்கள் அரசு சமூக நீதிக்கான அரசு  சமூகநீதிக்கு பொதுவான அமைச்சர் என கூறுவது எதற்கு? ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பட்டம் ஏன்?  என கேள்வி எழுப்பினார், தனித்தொகுதி தேவையான அனைத்து திட்டங்களையும் செய்யாமல் இருப்பது ஏன்? எனவும் கேள்வி கேட்டார். இந்நிகழ்ச்சியில் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மயிலாடுதுறை : ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பட்டம் ஏன்? கேள்வி எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்

கே.பி.எஸ். மணி என அறியப்படும் கதிர்வேல் பால சுப்பிரமணி என்பவர் முன்னாள் ராணுவ வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்திய அரசியல்வாதியுமாவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும் ஆவார். 1957 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும்,1967 தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகவும் சீர்காழி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 1957 தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த முத்தையா பிள்ளையைப் போல இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்ற ஒருவராகவும் இருந்தவர். தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1980-ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மயிலாடுதுறை : ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பட்டம் ஏன்? கேள்வி எழுப்பிய இயக்குநர் பா.ரஞ்சித்

இராணுவத்தில் இருந்து திரும்பிய இவர் உள்ளூரில் நிலவிய சாதிய, பண்ணையார் ஆதிக்கம் போன்றவற்றிற்கு எதிராக செயல்படத் தொடங்கினார். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போரட்டங்களினால் 1947-ஆம் ஆண்டில் இருந்து 1967 வரை 4 முறை சிறை சென்றார். பட்டியல் சாதியினர் பிணத்தை எடுத்துச்செல்லும்போது, யாரேனும் வழிமறித்தால், பிணத்தை அதே இடத்தில் எரிப்பேன் என கே.பி.எஸ். மணி சொன்னதால், எடமணலில் தடுத்தவர்களே பிணத்தைப் புதைக்க வழிவிட்டனர். இத்தகைய பல்வேறு சமூக போராளியாக கே.பி.எஸ்.மணி திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
பாடாலூரில் பரபரப்பு: பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயம்: போலீசார் தீவிர விசாரணை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Embed widget