மேலும் அறிய

Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!

Honda ZR-V Review in Tamil: ஹோண்டா ZR-V கார் எப்படி? பிரீமியம் ஹைப்ரிட் எஸ்.யு.வி-யில் 22.7 கி.மீ மைலேஜ்! அதிக விலையிலும் ஏன் இவ்வளவு வரவேற்பு?

இந்தியாவில் சிவிக் மற்றும் சி.ஆர்-வி போன்ற கார்களை நிறுத்திய ஹோண்டா நிறுவனம், தற்போது மீண்டும் பிரீமியம் கார் சந்தையில் முழுவீச்சில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

அதன் முதல் படியாக ஹோண்டா ZR-V (Honda ZR-V) என்ற புதிய ஹைப்ரிட் எஸ்.யு.வி காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, குறைந்த எண்ணிக்கையில் இந்தியாவில் விற்பனை செய்கிறது.

தோற்றம் மற்றும் உட்புறம்

தோற்றத்தைப் பொறுத்தவரை, மாசராட்டி கார்களைப் போன்ற முகப்பைக் கொண்டுள்ள இந்த கார், ஹோண்டாவின் மிகச் சிறந்த டிசைன்களில் ஒன்றாகும். காரின் உட்புறம் முழுமையான கருப்பு நிற தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கேபின் மற்றும் கட்டமைப்புத் தரம் மற்ற பிரீமியம் எஸ்.யு.வி-களை விட மிகச் சிறப்பாக உள்ளது.

Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!

காம்பாக்ட் கார்

எனினும், இதன் டச் ஸ்கிரீன் மிகவும் சிறியதாக உள்ளது. மேலும், சன்ரூஃப் வென்டிலேட்டட் சீட்கள் போன்ற நவீன அம்சங்கள் இதில் மிஸ்ஸிங். போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இட வசதியும் சற்று குறைவுதான். ஆனால், லக்கேஜை எடுத்தவுடன் பட்டனை அழுத்தாமலேயே தானாக மூடிக்கொள்ளும் ஸ்மார்ட் பூட்- டோர் வசதி அருமை.

இன்ஜின் மற்றும் டிரைவிங்

இந்த காரில் 181 bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் மற்றும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இதில் உள்ள இ.வி. மோட் மூலமாக காரை சத்தமே இல்லாமல் ஸ்டார்ட் செய்ய முடிகிறது. சூப்பர் கார்களில் இருப்பதைப் போன்ற மெட்டல் பேடல் ஷிஃப்டர்கள், ஸ்போர்ட்டியான டிரைவிங் அனுபவத்தை தருகின்றன. 

இதையும் வாசிக்கலாம்: Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!  

இதில் உள்ள eCVT கியர்பாக்ஸ் சீரான பயணத்திற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால், கடினமாக ஆக்சிலரேட் செய்யும் போது இன்ஜின் சத்தம் சற்று அதிகமாக கேட்கிறது. இதன் ஸ்டீயரிங் மற்றும் கையாளுமை மிகச் சிறப்பாக இருப்பதோடு, ஓட்டும்போது ஒரு பெரிய காரை ஓட்டும் உணர்வு ஏற்படவில்லை.

Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!

மைலேஜ்

இந்த காரின் மிகப்பெரிய பலமே இதன் மைலேஜ்தான். இது லிட்டருக்கு 22.7 கி.மீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ பயன்பாட்டில் நிச்சயமாக மைலேஜ் நன்றாக இருக்கும் என்று நம்பலாம்.

நிறைகள் என்ன?

அசத்தலான தோற்றம், சிறந்த கட்டமைப்புத் தரம், அதிக மைலேஜ் மற்றும் கையாளுமை.

குறைகள் உண்டா?

குறைவான இடவசதி, முக்கிய அம்சங்கள் இல்லாமை மற்றும் இறக்குமதி செய்யப்படுவதால் இதன் விலை மிக அதிகமாக இருக்கும்.

ஹோண்டா ZR-V கார் இறக்குமதி செய்யப்படுவதால் இதன் விலை அதிகமாக இருக்கும். இருப்பினும், இதன் ஸ்போர்ட்டியான தோற்றம், சிறந்த ஓட்டுதல் அனுபவம், தரம் மற்றும் மைலேஜ் காரணமாக, ஹோண்டா விற்பனைக்கு கொண்டுவரும் இந்த குறைந்த எண்ணிக்கையிலான கார்கள் எளிதில் விற்றுத் தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Honda: அப்படிப்போடு... ஒரே நேரத்தில் 10 புதிய பைக்குகள்.. ஹோண்டா வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
Honda: அப்படிப்போடு... ஒரே நேரத்தில் 10 புதிய பைக்குகள்.. ஹோண்டா வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
Embed widget