மேலும் அறிய

Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?

’திருடப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் உள்ள பாகங்கள் திருடப்பட்டோ அல்லது சேதப்படுத்தப்பட்டோதான் அந்த கார் நமது கைகளுக்கு திரும்ப கிடைக்கிறது. பழைய மாதிரி அவை திரும்பி கிடைப்பதே இல்லை’

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கார் திருட்டு என்பது தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. அதில், கார் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் உள்ள பாகங்கள் திருடப்பட்டோ அல்லது சேதப்படுத்தப்பட்டோதான் கார் நமது கைகளுக்கு திரும்ப கிடைக்கிறது. பழைய மாதிரி அவை திரும்பி கிடைப்பதே இல்லை. 

இந்நிலையில், இந்தியாவில் திருடர்கள் கை வைக்க தயங்கும் டாப் 10 கார்களை வகைப்படுத்தியுள்ளோம்.

திருடர்கள் அஞ்சும் பத்து கார்கள்! என்னென்ன ?

  1. Toyota Innova Hycross - அந்த வரிசையில் முதலில் இருப்பது டோயாட்டோ இன்னோவா ஹைராஸ் வகையான கார். காரணம், இதில் இருக்கும் என்ஜின் Immobilizer சிஸ்டம், ஸ்மார்ட் கீ, திறம்பட உருவாக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் கட்டமைப்பு மற்றும் உயர்நிலையான காருக்கேன பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட Connected Car வசதிகள் காரணம். இவை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவ்வளவு எளிதில் இந்த வகையான கார்களை திருட முடியாது என கூறப்படுகிறது.
  1. Tata Nexon – 2வது இடத்தை பிடித்திருப்பது டாட்டா தயாரிப்பான நெக்‌ஷான் வகை கார்கள். இதிலும் Engine Immobilizer இருப்பதாலும் Central Locking மற்றும் Anti-theft Alarm உள்ளதாலும் இந்த கார்களை திருடுவதும் அவ்வளவு சுலபமில்லை. கூடுதலான பாதுகாப்பு தொழில்நுட்பமும் இந்த வகை கார்களில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
  1. Tata Punch – 3வது இடத்தில் இருப்பதும் டாட்டா தயாரிப்பு காரான பன்ச்-தான். இதில் உள்ள Connected Car வசதி, Smart Security அமைப்பு, Immobilizer system ஆகியவை கார் பாதுகாப்பில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
  1. Mahindra XUV700 – நான்காவது இடத்தை பிடித்துள்ள கார் மகேந்திரா நிறுவன தயாரிப்பான XUV700. இந்த காரில் இருக்கும் AdrenoX Connected Technology, ஜிபிஎஸ் டிராக்கிங், ஸ்மார்ட் கீ உள்ளிட்டவைகள் கார் திருடப்படுவதில் இருந்து அதிக பாதுகாப்பை தருவதாக ஆய்வுகள் தெரிக்கின்றன.
  1. Mahindra Scorpio-N – 5வது இடத்தை பிடித்திருக்கும் காரும் மகேந்திர நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ – என் என்ற வகையான கார். இதில், Anti Theft – Alarm, Smart Key, Immobilizer வசதிகள் இருப்பதால் இந்த காரும் பாதுகாப்பான அம்சங்களின் பட்டியலில் இணைகிறது.
  1. Hyundai Creta – 6-வது இடத்தில் இருப்பது ஹூண்டாய் தயாரிப்பான க்ரிட்டா வகை கார்கள். இதிலும் Smart Key, Immobilizer வசதிகள் இருப்பதாலும் Smart Key இருப்பதாலும் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்ட்டு இருப்பதாலும் இந்த காரும் திருடர்களுக்கு சிம்ம சொப்பமனாக இருக்கிறது.
  1. Hyundai Verna – 7வது இடத்தை பிடித்திருப்பதும் ஹூண்டாய் வகை காரணான வெர்னா. இந்த வகை காரிலும் Smart Key, Immobilizer, Remote Tracking உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன.
  1. Kia Seltos – 8-வது இடத்தை பிடித்திருப்பது KIA தயாரிப்பான ஷெல்டோஷ் வகை கார். இதில், Immobilizer, உயர்ரக அமைப்பு இருப்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும் இந்த கார்களில் இருந்து திருடப்படும் உதிரி பாகங்களுக்கான தேவை என்பது மற்ற கார்களை காட்டிலும் குறைவாகவே உள்ளதால், இந்த கார்கள் திருடப்படும் கார்களின் பட்டியலில் குறைவாகவே உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  1. Honda City – இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருப்பதுதான் ஹோட்டா சிட்டி கார். இதில் Immobilizer வசதி இருக்கிறது. அதே நேரத்தில் கியா செல்டோசை போன்று உதிரி பாகங்களுக்கான தேவை சந்தையில் மிக குறைவாக இருப்பதால், இந்த கார்களை திருடர்கள் பெரும்பாலும் உதிரி பாக திருட்டு விற்பனைக்காக கை வைப்பது இல்லை.
  1. Volkswagen Virtus – இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருப்பது இந்த கார்-தான். இதில் Immobilizer, Smart Key வசதிகள் இருப்பதாலும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் வசதிகள் இருப்பதாலும் இந்த காரை திருடுவதும் சிரமம் என்கிறார்கள் கார் உற்பத்தியாளர்கள்.

 

மேல் குறிப்பிட்ட முதல் 10 வகையிலான கார்களை திருடவே முடியாது என்பது அல்ல. ஆனால், திருட்டில் இருந்து தற்காத்துக்கொள்ள பாதுகாப்பு வசதிகளை இந்த கார் நிறுவனங்கள் மேம்படுத்தியுள்ளன. குறிப்பாக, கார் திருட்டை கடினமாக்க கார் நிறுவனங்கள் உருவாக்கியுள்ளதுதான். Electronic Security System, Engine Immobilizer, Smart Key, GPS Tracker, Push Button Start Authentication, Connected Car Technology உள்ளிட்டவை. இந்த தொழில்நுட்பங்கள் கார் திருட்டில் இருந்து பெரும்பாலும் காப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget