மேலும் அறிய

ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!

இந்தியாவில் அரசுத்துறைகளில் அதிக காலி பணியிடங்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது- அன்புமணி.

படித்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்க ஓராண்டில் 1.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

ஓர் அறிவிக்கையைக் கூட வெளியிடாதது ஏன்?

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’கர்நாடக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 72,186 பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போர்க்கால வேகத்தில் ஆள்தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த த.வெ.க., இன்று வரை ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கையைக் கூட வெளியிடாதது இளைஞர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் அரசுத் துறைகளில் காலியிடங்கள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் மொத்தம் 72,186 பணியிடங்களை அடுத்த 6 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர்  டி.கே.சிவக்குமார் ஆணையிட்டுள்ளார். அதற்கான நிதித்துறை ஒப்புதல்  சில நாள்களுக்கு முன் வழங்கப்பட்ட நிலையில், 15 ஆள்தேர்வு அறிவிக்கைகள் கடந்த சில நாள்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருந்த கர்நாடக இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதேபோன்ற மகிழ்ச்சி தங்களுக்கு எப்போது கிடைக்கும்? என்பது தான் தமிழக இளைஞர்களின் வினாவாக உள்ளது.

6 லட்சம் காலி பணியிடங்கள்

 
இந்தியாவில் அரசுத்துறைகளில் அதிக காலி பணியிடங்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை தமிழகத்தை அடுத்தடுத்து ஆட்சி செய்த எந்த அரசும்  வெளியிடாத நிலையில், அரசுத்துறை, பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய 3 பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும் என்று அரசு பணியாளர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு காரணம் அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு நடத்தப்படாததுதான்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்; அதன் மூலம் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 5 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் தான் நிரந்தர அரசுப் பணிகள் வழங்கப்பட்டன. உறுதியளிக்கப்பட்ட 2 லட்சம் புதிய பணியிடங்களில் ஒரே ஒரு  பணியிடம் கூட ஏற்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஐந்தாண்டுகளில் ஒன்றரை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில், அதனால் ஏற்பட்ட காலியிடங்களும் கூட முழுமையாக நிரப்பப்படவில்லை. அதன் விளைவு தான் அரசுத் துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.
 

கடமை த.வெ.க. அரசுக்கு உண்டு


திமுக ஆட்சியில் உறுதியளிக்கப்பட்டவாறு அரசு வேலைகள் வழங்கப்படாததால், திமுக அரசுக்கு எதிராக இளைஞர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவியது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன், தவெக ஆட்சிக்கு வந்தால், அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி (எண்: பொருள்/4/ஏ/3)  அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி இளைஞர்கள் வாக்களித்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை த.வெ.க. அரசுக்கு உண்டு.

ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கை கூட வெளியிடப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட 2026&க்கான ஆண்டு திட்டத்தின்படி, பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்&461 இடங்கள், பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்&839 இடங்கள்,  தொகுதி 1 பணிகள் &26 என 1326 பணியிடங்களுக்கு மட்டும் தான் மூன்று ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
 
ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு

தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 31.38 லட்சம் பேரும், பதிவு செய்யாமல் ஒரு கோடி பேரும் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், இது தவிர்க்க முடியாதது ஆகும். அதன்படி பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியிருக்கும்.

இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஓராண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026&27ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். 
 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
PG படிக்க ஆசையா? புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு நுழைவுத் தேர்வு அறிவிப்பு!
PG படிக்க ஆசையா? புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு நுழைவுத் தேர்வு அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
Embed widget