மேலும் அறிய

Vinayagar Chathurthi 2023: மயிலாடுதுறையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா; 147  இடங்களில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு  147  இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.

விநாயக சதுர்த்தி என்ற  மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம். மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள்.

Vinayagar Chathurthi 2023: மயிலாடுதுறையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா; 147  இடங்களில் சிறப்பு வழிபாடு

இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார். இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Vinayagar Chaturthi 2023: ஆசியாவிலேயே ஒரே கல்லால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகர்

Vinayagar Chathurthi 2023: மயிலாடுதுறையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா; 147  இடங்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாக்காக பல வண்ணங்களிலும், பல வடிவங்களில், விதவிதமான  பொருட்களை கொண்டும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிப்பட்டு வருகின்றனர். பின்னர் விழா முடிந்ததும் மேள, தாளம் வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பதை  வாடிக்கையாக செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்திமை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்திவிழா வீடுகளிலும், கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 147 இடங்களில் தற்பொது வரை விநாகயகர் சிலைகள் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. 

Vinayagar Chathurthi 2023: மயிலாடுதுறையில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா; 147  இடங்களில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறையில் சின்னக்கடைவீதி சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதேபோல் மூங்கில் தோட்டம் கிராமத்தில் நெடுந்திடல் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் மூல மந்திர ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் செய்யப்பட்டு ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, புனித நீர் கொண்டு விநாயகர்க்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 108 சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் கொண்டு விநாயகர் அபிஷேக ஆராதனை மற்றும் மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மங்கள விநாயகர் ஆலயத்தில் சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு 108 சிதறு தேங்காய்கள் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget