மேலும் அறிய

திமுக கொடி கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி 

, 30 அடி உயர கொடி கம்பம், உயர் அழுத்த மின்கம்பியை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில், கோகுல் மற்றும் கார்த்தி இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.

தஞ்சாவூர்:   தஞ்சாவூரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க நேற்று கொடி கம்பம் அமைக்கும் பணியில், ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில், தி.மு.க.,நிர்வாகி இல்ல திருமண விழா இன்று (6ம் தேதி) நடந்தது. திருமண விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதியை வரவேற்கும் விதமாக, நேற்று ஒப்பந்த அடிப்படையில், பணியாளர்கள் கொடி கம்பம், தோரணம் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர்.         

இந்நிலையில், திருமண மண்டபம் அருகே, இரும்பு குழாயில், பொருத்தப்பட்டிருந்த தி.மு.க., கொடியை அமைக்கும் பணியில், சேலம் மாவட்டம் எட்டிக்குட்டை பகுதியை சேர்ந்த கோகுல்(29), சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கார்த்தி (45), ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, 30 அடி உயர கொடி கம்பம், உயர் அழுத்த மின்கம்பியை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில், கோகுல் மற்றும் கார்த்தி இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, கோகுல், கார்த்தி இருவரும் இறந்தனர். இது குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா பறிமுதல்... 3 பேர் கைது

தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தஞ்சை வடக்கு வாசல் ராஜகோரி சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த சக்திவேல் மகன் சூர்யா (25), முனிசிபல் காலனியை சேர்ந்த முருகேசன் மகன் அருண்குமார் (21), தஞ்சை மாவட்டம் திருவையாறு ஆச்சனூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சபரீசன் விஸ்வா (22) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1.94 கிலோ கஞ்சா, 400 போதை மாத்திரைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைப்பு செய்திகள்

புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
பெண்ணிடம் இருந்து 6 கிராம் தாலியை பறித்துச் சென்ற மர்மநபர்... பேராவூரணியில் பரபரப்பு
பெண்ணிடம் இருந்து 6 கிராம் தாலியை பறித்துச் சென்ற மர்மநபர்... பேராவூரணியில் பரபரப்பு
பாம்பு கடித்தால் பதற வேண்டாம்... உரிய சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம்!
பாம்பு கடித்தால் பதற வேண்டாம்... உரிய சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம்!
தஞ்சாவூரில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு
தஞ்சாவூரில் நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு "கொலு விற்பனை" கண்காட்சி தொடக்க விழா

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "பவளவிழா பாப்பா.. கோயில் நிலத்தை சுருட்டி பாக்கெட்டில் போட்ட திமுக.." தாறுமாறாக விமர்சித்த தவெக
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
Jailer 2: போதி.. போதி கல்பக்.. ரஜினியுடன் கைகோர்த்த எஸ்ஜே சூர்யா! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜெயிலர் 2!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Embed widget