வரும் மக்களவை தேர்தலில் அமமுக கூட்டணி வெற்றி பெறும் - டி.டி.வி. தினகரன்
வருகிற மக்களவைத் தேர்தலில் அமமுக அமைக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்று திட்டவமட்டமாக கட்சிப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர்: வருகிற மக்களவைத் தேர்தலில் அமமுக அமைக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்று திட்டவமட்டமாக கட்சிப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் திலகர் திடலில் அமமுக சார்பில் நேற்!று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, விடியல் ஆட்சி வரப்போகிறது என திமுகவினர் கூறினர். ஆனால், விவசாயிகளுக்கு நெல், கரும்புக்கான விலையை உயர்த்துவது, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை, கல்விக்கடன் ரத்து,. விவசாயத் தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை என்பது 150 நாள்களாக அதிகப்படுத்துவது, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 200}க்கும் அதிகமான தடுப்பணைத் திட்டம் என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். ஆட்சிக்கு வந்த திமுகவால் ஒரு பலனும் கிடைக்கவில்லை என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இந்த வாய்ப்பை அமமுகவினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் அமமுக அமைக்கும் கூட்டணி வெற்றி பெறும். அடுத்து, 2026ம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது ஆட்சி அமையக்கூடிய நிலை உருவாகும். ஜன.24 முதல் பிப்.3ம் தேதி ஒரு லோக்சபா தேர்தலில் 15 ஆயிரம் பேரிடம் சிலர் எடுத்த சர்வே மூலம் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வந்த சர்வே பொய் என உறுதி செய்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் எப்படி மக்களை ஏமாற்றினார்களோ, சர்வே என்ற பெயரில் தி.மு.க.,வின் பின்னணியில் முயற்சி நடந்து வருகிறது. காரணம், தி.மு.க., கூட்டணியும், அவர்கள் அமைத்த இண்டியா கூட்டணியும் சிதறி விட்டது. கர்நாடகா அணைக்கட்டுவதை தடுக்க முடியமால், ஸ்டாலின் வேஷம் போட்டு வருகிறார். 33 மாதங்களில் தி.மு.க.,வால் மக்களுக்கு என்ன கிடைத்தது என அனைவரும் சிந்திக்க துவங்கிவிட்டனர்.
நான் அரசியலுக்கு வருவேன் என நினைத்து பார்த்தது இல்லை. நான் எதையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. ஜெயலிலதா கொண்டு வந்தார். இந்த ஏழு ஆண்டுகளில் எந்த சோதனையை கடந்து, தமிழகத்தில், ஜெயலிலதாவின் உண்மையான ஆட்சியை செய்திடவும், அவர்கள் விட்டு சென்று பொறுப்புகளை செய்திடவும் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அ.ம.மு.க., ஆர்.கே., நகர் தேர்தலில் தி.மு.க., கூட்டணியும், பழனிசாமி கம்பெனியும் வீழ்த்தி வெற்றி பெற்ற கூட்டம். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்து இருக்கலாம்.
ஆனால் என்னுடைய முயற்சியில் நான் பின்வாங்கியது இல்லை. ஜெயலிலதா மறைவுக்கு பிறகு பழனிசாமி கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு அ.ம.மு.க,வையும், தினகரனையும் அழித்து, அரசியல் ரீதியாக ஒழித்து விடலாம் என பல நிர்வாகிகளை ஆசைகாட்டி விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்தார்கள். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் தினகரன் தரம்தாழ்ந்து பேசுகிறார்கள் என்கிறார்கள். உங்களுக்கு பதவிக்கொடுத்து, முதல்வர் சீட்டில் அமர வைத்தவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் நீங்கள். துரோகத்தை தவிர உங்களுக்கு என்ன தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்துக்கு துணைப் பொதுச் செயலர் ரங்கசாமி தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலர் ராஜசேகரன், அமைப்புச் செயலர்கள் ஜோதி, சாருபாலா தொண்டைமான், விவசாயப் பிரிவு இணைச் செயலர். நாராயணன், வக்கீல் பிரிவு செயலர் வேலு. கார்த்திகேயன், மாணவர் அணிச் செயலர் நல்லதுரை, மாநகர மாவட்டச் செயலர் ராஜேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.