மேலும் அறிய

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் - எந்த ஊரில் தெரியுமா..?

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியர் எடுத்த அதிரடி முடிவு.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புதிதாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அந்த மாணவ மாணவிகளுள் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்கப் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அந்தப் பள்ளி சார்பில் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு அப்பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் - எந்த ஊரில் தெரியுமா..?
 
இந்தப் பள்ளி மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான விருதை 2008 ஆம் ஆண்டு பெற்றுள்ளது. அதேபோன்று கர்மவீரர் காமராஜர் விருது மூலம் 25 ஆயிரம் ரூபாயும்  பெற்றோர் ஆசிரியர் கழக விருதாக 50 ரூபாயும் பெற்றுள்ளது. இந்த விருது தொகை முழுவதும் பள்ளியின் உட் கட்டமைப்பு வசதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இந்த பள்ளியில் கல்வி சீர் விழா நடைபெற்று வருகிறது. இதில்  வருடம் தோறும் பிப்ரவரி மாதம் ஊர் மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கி சீர்வரிசையாக எடுத்து வந்து கொடுக்கும் விழா நடைபெற்று வருகிறது.நான்கு வருடத்தில் இதுவரை 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன.
 
இந்த பள்ளியில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தலைமையாசிரியராக இந்திரா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இந்த பள்ளியில் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மாணவர் அறிமுக விழா போன்றவை நடத்தப்பட்டு அந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்குதல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் - எந்த ஊரில் தெரியுமா..?
 
அந்த வகையில் இந்த வருடமும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் சேர்ந்த மாணவர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் 15.07.2023 கல்வி வளர்ச்சி நாள் அன்று  குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் மேலும் இந்த வருடம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவச வேன் வசதி ஏற்படுத்தி தரப்படும்  என்று அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த துண்டு பிரசுரத்தில் பள்ளியின் சிறப்பம்சங்களாக பாதுகாப்பான உட்கட்டமைப்பு வசதிகள் நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் மாணவர்களுக்கான 14 வகை விலையில்லா அரசு நலத்திட்ட உதவிகள் பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்க தொகைகள் அரசு வேலையில் முன்னுரிமை போன்ற பல்வேறு சிறப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் உங்கள் அன்பு தங்கத்தை சேர்ப்பீர் தங்க நாணயம் வெல்வீர் என்றும் அதில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த துண்டறிக்கைகளை தலைமையாசிரியர் இந்திரா அப்பகுதியில் உள்ள வீடுகள் தோறும் வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் போன்றவற்றை ஆசிரியர்கள் இணைந்து தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்காக வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் 142 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.குடவாசல் ஒன்றியத்திலேயே அதிக மாணவர் சேர்க்கை இருக்கக்கூடிய பள்ளியாக இந்த பள்ளி இருக்கிறது. 

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் - எந்த ஊரில் தெரியுமா..?
 
இது குறித்து தலைமை ஆசிரியர் இந்திரா கூறுகையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு எங்கள் பள்ளியில் வருடம் தோறும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.அந்த வகையில் இந்த கல்வி ஆண்டில் சேரக்கூடிய மாணவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து தங்க நாணயம் வழங்க உள்ளோம் அதேபோன்று பள்ளி யில் செய்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் அதேபோன்று ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மழைக்காலங்களில் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு ஏதுவாக வேன் வசதி ஏற்பாடு செய்ய விருக்கிறோம் என்று கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
Embed widget