மேலும் அறிய
Advertisement
நாகூர் தர்காவின் 465 -ஆம் ஆண்டு கந்தூரிவிழா - பாய்மரம் ஏறுதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான 4,ஆம் தேதி கொடியேற்று வைபவம் நடைபெற உள்ளது இதற்காக நாகப்பட்டினத்திலிருந்து கொடி ஊர்வலம் நாகூரை வந்தடைந்து
சாதி மத பேதங்களை கடந்து மனித மனங்களில் நிறைந்து வாழும் நாகூர் ஆண்டவர் என்று பார் உலகம் போற்றப்படும் நாகூர் ஆண்டவர் அவர்களின் 465 -ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா வருகின்ற 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதையொட்டி இன்று அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும், நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஒதப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான 4,ஆம் தேதி கொடியேற்று வைபவம் நடைபெற உள்ளது இதற்காக நாகப்பட்டினத்திலிருந்து கொடி ஊர்வலம் நாகூரை வந்தடைந்து. இரவு கொடியேற்றம் நடைபெறும், தா பூத்து எனும் சந்தனக்கூடு நாகையிலிருந்து13ஆம் தேதி புறப்பட்டு 14ம் தேதி வெள்ளிக்கிழமை 4:30 மணி அளவில் தர்கா வந்தடைந்து.
ஹஜ்ரத் ஆண்டவர் அவர்கள் ராவுலா சஷரீப்புக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை அரசின் வழிகாட்டு நெறிமுறை படி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion