மேலும் அறிய

அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத திருவாரூர் - தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துமா..?

திருவாரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் அரசின் உதவிகளை பெற முடியாமல் தவிக்கும் மாணவர்கள்.

திருவாரூர் நகர் 30 வார்டுகள் 65 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகராட்சி, இந்த திருவாரூரை  மாவட்டமாக கடந்த 1997ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊர் திருவாரூர். மேலும், தேர் உலக பிரசித்தி பெற்றதாகும். அதேபோல் பிரசித்தி பெற்ற கோவில் நகரமாக திகழும் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் ஐந்து பாரம்பிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவாரூர் தலைநகராமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்ததாக வரலாறு உண்டு, வரலாற்று ரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது.  கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். இவர்கள் இம்மாவட்டத்திற்கு புகழையும், கண்ணியத்தையும் சேர்க்கிறார்கள். இப்படி சிறப்புக்கு மேல் சிறப்புகளும் மாவட்ட தலை நகரமாக கொண்ட இந்த திருவாரூரில் இதுநாள்வரை அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது மிகவும் ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் இப்பகுதி மக்களிடம் எழுப்பி உள்ளது. இதுநாள்வரை இப்பகுதி மாணவர்கள் அருகில் உள்ள அம்மையப்பன்  புலிவலம் போன்ற பகுதிக்கு நீண்டதூரம் சென்றுதான் கல்வி பயின்று வருகின்றனர். 


அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத திருவாரூர் - தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துமா..?

அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாதது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவாரூர் மாவட்டம் 1997ம் ஆண்டு உதயமானது. திருவாரூர் ஒரு முக்கியமான நகரமாக உள்ளது. திருவாரூர் நகர் பகுதியில் மட்டும் 65 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த நகரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி என்பது இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையாக உள்ளது. எப்படியாவது ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வரவேண்டும் என்று மக்களுடைய ஆசையாக உள்ளது. ஆனால் திருவாரூர் நகர் பகுதியில் தனியார் பள்ளியின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அரசு உதவியுடனும் பெரிய பொருட்செலவு இல்லாமல் அவர்கள் படிப்பதற்கு வசதி இல்லாத நிலை உள்ளது. ஆகவே உடனடியாக தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.


அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத திருவாரூர் - தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துமா..?

மேலும் தலைமையாசிரியர் ஈவேரா கூறுகையில், பொதுவாக மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் திருவாரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் அரசு உதவிகளை பெற முடியாத நிலை உள்ளது. தற்போது அரசாங்கம் புதிதாக ஒரு சட்டம் இயற்றியுள்ளது சட்டத்தின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் பொழுது சிறப்பு ஒதுக்கீடு உண்டு என அறிவித்திருக்கிறார்கள். திருவாரூரில் மேல்நிலைப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் தனியார் பள்ளிகளில் படிப்பதால் அரசின் சலுகைகளைப் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் அதே போன்று மாணவர்கள் அரசு உதவிகளை பெற வேண்டும் என்ற இரண்டு காரணத்தினால் உடனடியாக அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டுவரவேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget