மேலும் அறிய

Thiruvarur: உயிரிழந்த மகளுக்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய தந்தை - ஊர் கூடி வழிபட்ட நெகிழ்ச்சி சம்பவம்

தினந்தோறும் மகளின் நினைவுகளை கிரகிக்க முடியாமல் தவித்து வந்த தந்தை சௌந்தரபாண்டியன் தங்களது வீட்டு பூஜை அறையில் மகளின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து தினமும் வழிபட்டு வந்துள்ளார்.

இரண்டு வயதில் உயிரிழந்த மகளுக்கு கோவில் கட்டி குடமுழுக்கு நடத்திய தந்தை.ஊர் கூடி வழிபட்ட நெகிழ்ச்சி சம்பவம்.
 
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட புள்ளமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு சபரி வாசன் என்கிற மகனும் சக்தி பிரக்யா என்கிற மகளும் இருந்தனர். இந்த நிலையில் சக்தி பிரக்யாவுக்கு 2 1/2 வயது இருக்கும்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவர் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். செல்லமாக வளர்த்த மகள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தில் பேரிடியாக இறங்கியுள்ளது. அதனால் தாய், தந்தை இருவரும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து தினந்தோறும் மகளின் நினைவுகளை கிரகிக்க முடியாமல் தவித்து வந்த தந்தை சௌந்தரபாண்டியன் தங்களது வீட்டு பூஜை அறையில் மகளின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்து தினமும் வழிபட்டு வந்துள்ளார். மேலும் மகளின் நினைவு என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் புகைப்படம் மட்டும் போகாது ஆலயம் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக சிறுக சிறுக பணம் சேர்க்க தொடங்கி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஆலயம் கட்டும் பணியினை தனது வீட்டிற்கு அருகில் அவர் தொடங்கியுள்ளார்.

Thiruvarur: உயிரிழந்த மகளுக்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய தந்தை - ஊர் கூடி வழிபட்ட நெகிழ்ச்சி சம்பவம்
 
இந்த நிலையில் மூன்று வருடமாக நடைபெற்ற ஆலய கட்டுமான பணி நிறைவடைந்து இன்று அதற்கான குடமுழுக்கு விழாவையும் அவர் வெகு விமர்சையாக நடத்தி இருக்கிறார். தனது மகளை அம்மனாக பாவித்து தனது குழந்தை சாயலில் அம்மன் சிலை வைத்து ஸ்ரீ சக்தி பிரக்யா அம்மன் என்கிற பெயரில் கோவில் எழுப்பி  அதற்கு அபிஷேகம் ஆராதனை செய்து குடமுழுக்கு நடத்தி உள்ளார். சௌந்தரபாண்டியனில் இந்த செயலை கண்டு வியந்த ஊர் மக்கள் ஒன்று கூடி இந்த ஆலய குடமுழக்கில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு செய்வது போன்று வேத விற்பன்னர்களை வைத்து யாகம் வளர்த்து ஆகம விதிமுறைப்படி அவர் இந்த குடமுழுக்கை நடத்தினார். யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹதி நடைபெற்ற பின்பு புனித கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்ற குடமுழுக்கு நடைபெற்றது.

Thiruvarur: உயிரிழந்த மகளுக்கு கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய தந்தை - ஊர் கூடி வழிபட்ட நெகிழ்ச்சி சம்பவம்
 
இதுகுறித்து சௌந்தரபாண்டியன் கூறுகையில், “எனது மகள் உயிருடன் இருந்து அவளுக்கு ஒரு திருமணம் செய்தால் என்ன செலவாகும் என்பதை நினைத்து தான் இதை செய்துள்ளேன். எனக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும் இந்த குழந்தை எனக்கு மட்டுமல்லாமல் இந்த ஊருக்கும் நன்மை செய்யும் என்கிற நோக்கில் இந்த ஆலயத்தை கட்டி உள்ளேன். மேலும் வருடா வருடம் இந்த கோயிலுக்கு திருவிழா எடுத்து வழிபடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
Embed widget