மேலும் அறிய

திருத்துறைப்பூண்டியில் நலிவடைந்து வரும் அரசு கால்நடை பண்ணை - விவசாயிகள் வைத்த கோரிக்கை

நலிவடைந்து வரும் திருத்துறைபூண்டியில் உள்ள அரசு கால்நடை பண்ணையை மேன்படுத்துமா தமிழக அரசு?

இந்தியாவின் பிரதான தொழில் விவசாயம். விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருப்பது கால்நடைகள். கால்நடைகளில் முக்கியதுவம் வாய்ந்தது மாடுகள். மாடுகளில் பல வகை உண்டு இந்த பல வகையில் சிலவற்றை மட்டும் தான் மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் 36 வகை நாட்டு இன மாடுகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம்  வழங்கியுள்ளது. இதே போன்று தமிழகத்தில் 16 வகையான நாட்டு இன மாடுகளுக்கு மட்டும் அங்கீகாரம் உள்ளது. இந்த 16 வகையில் ஒரு வகை மாடுதான் உம்பளச்சேரி மாடுகள். நாகை மாவட்டத்தில் உள்ள உம்பளச்சேரி கிராமம் தான் இதற்கு பூர்வீகம். சாதாரண மாடுகளை விட பன் மடங்கு பலசாலியான உம்பளசேரி மாடுகள் விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறது. இந்த வகை மாடுகளை பராமரிப்பதற்கு என்று கால் நடைத்துறையால் 1968ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொற்கை கிராமத்தில் 496 ஏக்கரில் பண்ணை உருவாக்கப்பட்டது. அன்று முதல் உம்பளச்சேரி மாடுகளை பராமரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்தும் உற்பத்தி செய்யும் பால் விற்பனையும் செய்யப்படுகிறது.


திருத்துறைப்பூண்டியில் நலிவடைந்து வரும் அரசு கால்நடை பண்ணை - விவசாயிகள் வைத்த கோரிக்கை

இந்த கால்நடை குடிநீருக்காக 12 குளங்கள் உள்ளது. பிரத்தேகமாக பல ஏக்கரில் புல் வளர்க்கப்பட்டு தீவனமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உலர்ந்த வைக்கோலும் தீவனமாக கொடுக்கப்படுகிறது. சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட மாடுகள் பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 400க்கும் குறைவான மாடுகளே உள்ளன. காரணம் இம்மாடுகளை பராமரிக்க போதுமான பணியாளர்கள் இல்லாதாதால் மாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்பினால் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். மாடுகள் குறைந்ததற்கு காரணம் இது மட்டுமல்ல என்றும் குளங்களில் தண்ணிர் இல்லாததாலும் போதிய உலர்ந்த வைக்கோல் வைக்கப்படுவது இல்லை என்றும் கூறப்படுகிறது. எனவே குளங்கள் அனைத்தையும் தூர்வாரி உரிய நேரத்தில் தீவனம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.


திருத்துறைப்பூண்டியில் நலிவடைந்து வரும் அரசு கால்நடை பண்ணை - விவசாயிகள் வைத்த கோரிக்கை

இவை அனைத்திற்கும் மேலாக உம்பளச்சேரி மாடுகளுக்கு என்று அங்க அடையாளங்கள் பாரம்பரியம் உண்டு. ஆனால் தற்போது அந்த பாரம்பரியம் மறையும் வகையில் அங்க அடையாளம் இன்றி உம்பளச்சேரி மாடுகள் காணப்படுகின்றன. அந்த பாரம்பரியத்தை காக்கும் வகையில் விவசாயிகள் கொண்ட கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்பண்ணையில் வேளாண்துறை மாதிரி பண்ணை ஒன்று அமைத்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கால்நடை துறை துணை இயக்குனரிடம் கேட்டத்திற்கு,  “கொற்கை கால்நடை பண்ணை குளங்கள் 100நாள் வேலை திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஊழியர்கள் பற்றாக்குறையை அரசிடம் தெரிவித்து உற்ற நடவடிக்கை எடுக்கப்படும் வேளாண்துறை மாதிரி பண்ணை ஒன்று அமைத்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை குறித்தும் அரசிடம் தெரிவித்து உற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget